செய்திகள் :

ஷாருக்கான் சிறந்த நடிகரா? தேசிய விருதுக் குழுவை விளாசிய ஊர்வசி!

post image

சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற ஊர்வசி தன் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுகான தேசிய விருதுகள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த 71-வது தேசிய விருதுகள் அறிவிப்பில், சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கானும், விக்ராந்த் மாஸேவும் வென்றனர்.

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது மலையாளத்திலிருந்து நடிகர் விஜய ராகவனுக்கும் சிறந்த துணை நடிகைக்கான விருது நடிகை ஊர்வசிக்கும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேசிய விருதுகள் குறித்து பேசிய நடிகை ஊர்வசி, “ஷாருக்கானை சிறந்த நடிகராகத் தேர்வு செய்வதற்கான அளவுகோள்கள் என்ன? சிறந்த மூத்த நடிகரான விஜய ராகவனை வெறும் துணை நடிகராக எப்படி குறுக்கலாம்? அவருக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு நடுவர் விருது (Special Jury Award) வழங்கியிருக்க வேண்டாமா?

நடிகர் விஜய ராகவன். பூக்காலம் ஒப்பனையில்... (இரண்டாம் படம்)

குட்டேட்டன் (விஜய ராகவன்) நடித்த பூக்காலம் திரைப்படத்தில் அவரின் இணையாக நடிக்க முதலில் என்னைத்தான் அணுகிறார்கள். ஆனால், அக்கதாபாத்திரத்திற்கு தினமும் 9 மணிநேரம் ஒப்பனை செய்ய வேண்டுமென்றதால் அப்படத்திலிருந்து விலகினேன்.

பல கோடி கொடுத்தாலும் நான் சில விஷயங்களைச் செய்ய மாட்டேன். அப்படத்திற்காக விஜய ராகவன் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்திருப்பார்? அவரை எப்படி துணை நடிகர் எனச் சொல்லி விருது கொடுக்க முடிகிறது? ஷாருக்கானுடன் ஒப்பிடும்போது இவர் நடிப்பை எப்படி மதிப்பிட்டார்களோ!

ஏன் இந்தாண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்படவில்லை. என்ன நெறிமுறைகள் இவை? வேறு ஏதாவது அளவுகோள்கள் இருக்கின்றனவா? தமிழில் நான் நடித்த ஜே. பேபி திரைப்படமும் சிறந்த நடிகைக்கான விருது பரிந்துரையில் இருந்தது. அந்தப் படத்தைப் பார்த்தார்களா இல்லையா?

ஊர்வசி, ஜே. பேபி திரைப்படத்தில்....

நீங்கள் கொடுப்பதையெல்லாம் அமைதியாக வாங்கிச் செல்ல தேசிய விருதுகள் ஒன்றும் அரசு ஓய்வூதியப் பணங்கள் கிடையாது. நீங்கள் ஒன்றை கொடுத்தால், அதை நாங்கள் மகிழ்ச்சியாகப் பெற வேண்டும்.

மலையாளத்தின் சிறந்த திரைப்படமான ஆடுஜீவிதம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவுக்கான தேசிய விருதுகள் குறித்து மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி குரல் எழுப்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஊர்வசியின் இந்தக் கண்டனக் குரல் மலையாளத் திரை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், தேசிய விருதை வாங்க ஊர்வசி செல்வாரா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது!

இதையும் படிக்க: அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

Actor Urvashi slams National Award jury for giving her award in supporting category

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமல் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை இன்று(ஆக. 4) நடைபெற்றது.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்... மேலும் பார்க்க

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் மூன்று திரைப்படங்களின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. நடிகை மாளவிகா மோகனன் தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக வலம் வருபவர் ... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் - 2, இனி 6 நாள்களும் ஒளிபரப்பாகாது!

எதிர்நீச்சல் -2 தொடர் இனி வாரத்தின் 6 நாள்களும் ஒளிபரப்பாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சியின் வருகையால் எதிர்நீச்சலின் ஒளிபரப்பு நாள்களில் ஒன்று குறைந்துள்ளது. அதாவது... மேலும் பார்க்க

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

பாக்கியலட்சுமி தொடரில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை சுசித்ரா, தற்போது புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடர், அவரின் தாய்மொழியான கன்னடத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.வங்க மொழியில் உருவான ஸ்ரீமோயி என்ற தொட... மேலும் பார்க்க

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

சின்ன திரை நடிகை ஜீவிதா குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். வழக்கமாக நண்பர்களுடன் இருக்கும் நாள்களை புகைப்படங்களாக பதிவிடும் ஜீவிதா, பிறந்தநாளை தனது குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடியுள்ளார். ... மேலும் பார்க்க

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் ஐயம் ... மேலும் பார்க்க