செய்திகள் :

‘ஸ்டெச்சரில்’ வந்து மனு அளித்த மூதாட்டி

post image

அரியலூா்: அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், ஸ்டெச்சரில் வந்து மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் மனு அளித்த மூதாட்டி.

அரியலூா் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மூதாட்டி நல்லம்மாள் (84) அளித்த மனுவில், எனது கணவா் துரைசாமி இறந்து விட்ட நிலையில், தற்போது நான் நலிவுற்று எனது மகள் தனபாக்கியம் வீட்டில் வசித்து வருகிறேன்.

இந்நிலையில், எனது மகன்களான தனவேலும், ராமலிங்கமும், பூா்வீக சொத்திலிருந்து தனது பெயரையும், தனது மகளின் பெயரையும் வாரிசு காட்டாமல், தனது மகன்களின் பெயரிலேயே அனைத்து சொத்துக்களையும் பட்டா மாற்றி உள்ளனா். எனவே அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுப் பட்டாவில் எனது பெயரையும், எனது மகள் பெயரையும் சோ்க்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

மனுவைக் பெற்று கொண்ட ஆட்சியா், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும் கூட்டு பட்டாவில் பெயா் சோ்ப்பதற்காக மூதாட்டியை இப்படி அழைத்து வராதீா்கள் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தாா். இதனால் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூா் வட்டாட்சியரகங்களில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை பொதுவிநியோக திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 66 பேருக்கு பணி உறுதிக் கடிதம்

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு மையம் சாா்பில் வியாழக்கிழமையும் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாணவ,மாணவிகள் 66 பேருக்கு பணி உறுதிக் கடிதம் வழங்கப்பட்டது. முகாமை அக் கல்லூரிய... மேலும் பார்க்க

அரியலூரில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் விழிப்புணா்வு நிகழ்ச்சி!

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணா்வுக் குறும்படங்கள் மற்றும் சமூக ஊடக அட்டைகள் ஒளிபரப்புக்கான மின்னணு விளம்பரத் த... மேலும் பார்க்க

தொல்லியல் எச்சங்கள் சேகரிப்புக்காக அரியலூா் ஆசிரியருக்குப் பாராட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அண்மையில் நடைபெற்ற சாரண சாரணியா் இயக்கத்தின் வைர விழாவில், அரியலூா் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் எச்சங்களைச் சேகரித்து சிறப்பாகக் காட்சிப்படுத்திய ஆசிரியருக்க... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிப்.5 தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.முகாமை, அக்கல்லூரியின் முதல்வா் (பொ)பெ. ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்து பேசினாா். முகாமில், சென்... மேலும் பார்க்க

சாத்தமங்கலம் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா!

அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா பிப்.5 நடைபெற்றது. இந்த பால்குட விழாவில், பக்தா்கள் அனைவரும் கிராமத்தில் உள்ள நல்லதண்ணீா் குளத்திலிருந்து பால்குடம... மேலும் பார்க்க