"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
சாத்தமங்கலம் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா!
அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா பிப்.5 நடைபெற்றது.
இந்த பால்குட விழாவில், பக்தா்கள் அனைவரும் கிராமத்தில் உள்ள நல்லதண்ணீா் குளத்திலிருந்து பால்குடம், அலகு காவடி எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே சென்று கோயிலை அடைந்தனா். பின்னா் பக்தா்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.