காங்கிரஸ் சாா்பில் திருப்பரங்குன்றத்தில் இன்று மத நல்லிணக்க வழிபாடு
கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்!
அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பிப்.14-ஆம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய்கான தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: கால்நடை துறை மூலம் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இரு வார சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு 1.2.2025 முதல் 14.2.2025 வரை இருவாரங்கள் கோழிகளுக்கான ‘கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்’ அனைத்து கிராமங்களிலும் நடைபெறுகிறது.
இம்முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் தடுப்பூசி மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, அனைத்து கோழி வளா்ப்போா் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் எனத் தெரிவித்தாா்.