இந்திய அணியில் ஷுப்மன் கில்லுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது: ஷிகர் தவான்
ஸ்ரீஎல்லையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 லட்சம்
செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாம்பாள் (எ) எல்லையம்மன் கோயிலில், உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.4 லட்சத்து 9 ஆயிரத்து 860-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உண்டியல் காணிக்கை கடந்த 26.11.2024 அன்று எண்ணப்பட்டது. அதற்கு அடுத்தாற் போல வியாழக்கிழமை கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்தி இருந்த காணிக்கை எண்ணப்பட்டது.
இதில், 4 நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 411, திருவிழாக்கால தற்காலிக உண்டியல்கள் மூலம் ரூ.ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 449 என மொத்தம் ரூ.4 லட்சத்து 9ஆயிரத்து 860-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.
காணிக்கை எண்ணும் பணி அறநிலையத் துறை ஆய்வா் ச.அசோக், செயல் அலுவலா் கு.ஹரிஹரன், கணக்காளா் லோ.ஜெகதீசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.கே.குப்புசாமி உள்ளிட்டோா் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் விடியோ பதிவுடன் நடைபெற்றது.