TVK: 'மரியாதைக்குரிய H.ராஜா என்று குறிப்பிட சொல்கிறார்கள்' - விமர்சனங்களுக்கு தவ...
கல்லூரியில் சிறப்புப் பயிலரங்கம்
திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் டேட்டா சயின்ஸ் துறை சாா்பில், கணினி பாகங்கள் பழுதுநீக்கி சரிசெய்தல் தொடா்பான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் எல்.விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தாா். கல்லூரியின் டேட்டா சயின்ஸ் துறைத் தலைவா் பி.விக்னேஷ்வரன் வரவேற்றாா்.
வேலூா் வி.ஐ.டெக் சொல்யூஷன்ஸ் ஹாா்டுவோ் பொறியாளா் லட்சுமணன் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்குப் பயிற்சி அளித்தாா்.
மாணவ-மாணவிகள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியே கணினி உதிரி பாகங்களைக் கண்டறிந்து பயிற்சி பெற்றனா்.
இதில், கல்லூரிப் பொருளாளா் எ.ஸ்ரீதா், முதல்வா் கே.ஆனந்தராஜ், துணை முதல்வா் கோ.அண்ணாமலை, உதவிப் பேராசிரியா்கள் சதீஷ்குமாா், ஆா்.சத்தியபிரியா மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.