செய்திகள் :

Doctor Vikatan: 2 வயதுக் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல்... ஆன்டிபயாட்டிக் பலன் தராதது ஏன்?

post image

Doctor Vikatan: என் குழந்தைக்கு 2 வயதாகப் போகிறது. குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது. ஒன்றேகால் வயதில் ஒருமுறை யூரினரி இன்ஃபெக்ஷன் வந்து, மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். ஆன்டிபயாட்டிக் கொடுத்து சரியானது. ஆனாலும் அடிக்கடி காய்ச்சல் வருகிறது. நாங்களும் ஆன்டிபயாட்டிக் கொடுக்கிறோம்.  ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் காய்ச்சல் திரும்பத் திரும்ப வருகிறது. இதற்கு என்ன காரணம், என்ன தீர்வு?

- சுகந்தி, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி 

மருத்துவர் சஃபி சுலைமான்

குழந்தையின் வயதைக் குறிப்பிட்ட நீங்கள், ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று குறிப்பிடவில்லை. ஒன்றேகால் வயதில் யூரினரி இன்ஃபெக்ஷன் வந்ததாகச் சொல்லியிருப்பதால், ஒருவேளை பெண் குழந்தையாக இருப்பின், அந்த இன்ஃபெக்ஷன் மீண்டும் மீண்டும் வருகிறதா என்று பார்க்க வேண்டியிருக்கும்.

பொதுவாகவே, ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு யூரினரி இன்ஃபெக்ஷன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆண் குழந்தையாக இருந்தால், சிறுநீர் வெளியேறும் பாதையில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்று பார்க்க வேண்டியிருக்கும். குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது, ஆன்டிபயாட்டிக் கொடுக்கிறோம் என்று நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்க்கும்போத, உங்கள் குழந்தைக்கு மருத்துவ ஆலோசனையின்றி நீங்களாக சிகிச்சை கொடுக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. அப்படிச் செய்கிறீர்கள் என்றால் அது மிக மிகத் தவறு.

ஆன்டிபயாட்டிக்

முதலில் குழந்தைகள்நல மருத்துவரிடம் உங்கள் குழந்தையைக் காட்டி ஆலோசனை பெறுங்கள். ரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை, தேவைப்பட்டால் பிளட் ஸ்மியர் பரிசோதனை போன்றவற்றைச் செய்து பார்க்க வேண்டியிருக்கும். குழந்தைக்கு அடிக்கடி இன்ஃபெக்ஷனும் காய்ச்சலும் வருவதற்கான காரணங்களை அதில் தெரிந்துகொள்ளலாம். அதற்கேற்ப சிகிச்சை கொடுத்தால்தான் இந்தப் பிரச்னையிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

அதைத் தவிர்த்து நீங்களாக ஆன்டிபயாட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தால், ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ் (antibiotic resistance) எனப்படும் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்புத்தன்மை வந்துவிடும். அதன் பிறகு எந்த ஆன்டிபயாட்டிக் மருந்தும் வேலை செய்யாத நிலை வரும். எனவே, பிரச்னையை மேலும் சிக்கலாக்காமல், உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Cooking Vessels: அவை வெறும் சமையல் பாத்திரங்கள் அல்ல... நோய் தடுப்பான்கள்! - பாத்திரங்களின் பலன்கள்

மண்சட்டியில் தொடங்கி இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் போன்ற உலோகப் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவந்த காலம் மலையேறிவிட்டது. 'எண்ணெய் சேர்க்காமலேயே சமைக்கலாம். உணவும் பாத்திரத்தில் ஒட்... மேலும் பார்க்க

`அரசியல் முடிவு அவரது தனிப்பட்ட விருப்பம்; அதில் குடும்பத்துக்கு தொடர்பு இல்லை' -ஆதவ் அர்ஜூனா மனைவி

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா சில நாள்களுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார்.நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் ஆதவ் அர... மேலும் பார்க்க

மதுரை: ``கால்நடை, பிராணி வளர்க்க 50 மடங்கு கூடுதல் கட்டணம் நிர்ணயம்.. ஏன்?'' -கொந்தளிக்கும் மக்கள்

"சைக்கிளுக்கு 50 ரூபா, பைக்கிற்கு 100 ரூபா, காருக்கு 300, லாரிக்கு 500, ரயிலுக்கு 1000, பிளைட்டுக்கு 5000 ரூபா" என்று வைகைப்புயல் வடிவேலு ஒரு திரைப்படத்தில் டோக்கன் போடச்சொல்வது செம காமெடியாக இருக்கும... மேலும் பார்க்க

US: ``Gold Card Visa வாங்கி, இந்தியர்களை வேலைக்கு எடுங்க...'' - என்ன சொல்கிறார் ட்ரம்ப்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கோல்ட் கார்டு என்னும் விசா திட்டத்தை புதிதாக அறிமுகப்படுத்தினார். அதுக்குறித்து ட்ரம்ப் பேசியிருப்பதாவது, "கோல்ட் கார்டு சீக்கிரம் விற்று தீர்ந்துவிடும். அமெரிக்காவில் உ... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் இந்திக்கு பதிலாக ஆங்கில எழுத்தை அழித்த திமுகவினர்... வைரலாகும் வீடியோ

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், கடந்த இரு தினங்களாக ரயில் நிலையத்தில் உள்ள ஊர் பலகைகளில் ஹிந... மேலும் பார்க்க