திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூரில் மயானக் கொள்ளை திருவிழா
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் வியாழக்கிழமை மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.
திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலையில் உள்ள அங்காளம்மன் கோயில், அசலியம்மன் கோயில் தெரு மற்றும் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்காளம்மன் கோயில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவா் சுவாமிகள் வியாழக்கிழமை வீதியுலா வந்தனா்.
மாலை 5 மணிக்கு ஈசான்ய மைதானத்தில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
கீழ்பென்னாத்தூா்...
கீழ்பென்னாத்தூா் ஆஞ்சநேயா் குளக்கரை அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் மயானக் கொள்ளை திருவிழாவையொட்டி,
காலை 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவா் முழங்க நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தாா்.
மாலை 5 மணிக்கு மயானத்தில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.