சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 23,500 புள்ளிகளுக்கும் கீழே முடிந்தது; ட...
ஸ்ரீதர் வேம்பு கிளப்பிய மொழி பிரச்னை - ஆதரவும், எதிர்ப்பும் சொல்வதென்ன?!
கடந்த 14-ம் தேதி எக்ஸ் பக்கத்தில் இரண்டு இளைஞர்கள் 'இந்தி தேசிய மொழி' என எழுதப்பட்டிருந்த டி-சர்ட்களை அணிந்திருந்தனர். அதில் இந்தி தேசிய மொழி என்பதற்கு மேல் கோடும் இடம்பெற்றிருந்தது. இது சமூக சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கு பதிலளித்த ஜோஹோ தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, "இந்த உணர்வோடு நான் உடன்படுகிறேன். நீங்கள் பெங்களூரை உங்கள் வீடாக மாற்றினால், நீங்கள் கன்னடம் கற்க வேண்டும், உங்கள் குழந்தைகளுக்கும் கன்னடம் கற்று கொடுக்க வேண்டும். பெங்களூரில் பல வருடங்கள் வாழ்ந்த பிறகு அப்படிச் செய்யாமல் இருப்பது மரியாதைக் குறைவு. பிற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் எங்கள் பணியாளர்களிடம் தமிழ் கற்க முயற்சி செய்யுமாறு அடிக்கடி கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார்.
ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்துக்கு வரவேற்பும், ஏதிர்ப்பும் கிளம்பியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எக்ஸ் பயனர் ஒருவர், "மும்பையில் எனக்கு பல கன்னட நண்பர்கள் உள்ளனர். பல ஆண்டுகளாக இங்கு வசிக்கின்றனர். அதில் எவருக்கு ஒரு வார்த்தை கூட மராத்தி பேசத் தெரியாது. நியாயமா?" என கேள்வி எழுப்பியிருக்கிறார். இதேபோல் மற்றொரு நபர், "பிரச்சனை என்னவென்றால், சென்னையில் 3 ஆண்டுகள் பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் அடுத்த 5 ஆண்டுகள் பெங்களூருவுக்குச் சென்று அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஹைதராபாத்தில் பணியாற்றலாம். எனவே அவர்கள் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியைக் கற்க வேண்டும். பின்னர் இறுதியாக மகாராஷ்டிராவில் எங்காவது தங்கள் சொந்த ஊரில் குடியேற வேண்டும். அப்போது இந்த மொழிகளை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
வெவ்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்வது நல்லது என்றாலும், தவறான பிராந்திய பெருமையை திருப்திப்படுத்த அதை அவர்களின் தொண்டைக்குள் தள்ள முடியாது?. மேலும் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் செய்யும் பணி ஐரோப்பிய, அமெரிக்க அல்லது பிற சர்வதேச வாடிக்கையாளர்களுடன் ஆங்கிலத்தில் உள்ளது. எனவே இந்த மொழிகளும் தொழில் ரீதியாக உதவாது. சென்னையில் சிறு தொழில்கள் நடத்துவோர், வாடிக்கையாளர்கள் உள்ளூர் என்பதால் சரளமாக தமிழ் பேசுவார்கள். ஹைதராபாத்தில் தெலுங்கு பேசும் குஜராத்திகள் மற்றும் மார்வாடிகளை காணலாம்.
இதில் மொழியைக் கற்காதது பிரச்சினை இல்லை. அதனுடன் இணைந்த பிராந்திய ஈகோவைதான் காட்டுகிறது." என தெரிவித்துள்ளார். மற்றொருவர், "நீங்கள் இங்கு முதிர்ச்சியடையவில்லை. எந்த மொழியையும், கலாச்சாரத்தையும் அவமரியாதை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் ஒரு மொழியைக் கற்காமல் இருப்பது அவமரியாதையா? உங்கள் லாஜிக் அங்கேயே இறந்து விடுகிறது" என தெரிவித்துள்ளார்.
இப்படி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி உள்ளது.