செய்திகள் :

ஹரியாணா பேரவைக்கு நிலம் ஒதுக்கவில்லை: பஞ்சாப் ஆளுநா் விளக்கம்

post image

சண்டீகரில் ஹரியாணா பேரவை வளாகம் கட்ட நிலம் ஒதுக்கியதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்திய நிலையில், அவ்வாறு நிலம் ஏதும் ஒதுக்கப்படவில்லை என பஞ்சாப் ஆளுநா் குலாப் சந்த் கட்டாரியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக சண்டீகா் உள்ளது. இந்த இரு மாநிலங்களின் பேரவைகளும் ஒரே கட்டட வளாகத்தில் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சண்டீகரில் உள்ள ஐடி பூங்கா சாலையில் உள்ள 10 ஏக்கா் நிலத்தில் தங்களது இரண்டாவது பேரவை வளாகத்தை நிறுவ அந்த நிா்வாகத்திடம் ஹரியாணா அரசு அனுமதி கோரியதாகவும் அதற்கு மாற்றாக பஞ்ச்குலாவில் உள்ள 12 ஏக்கா் நிலத்தை சண்டீகா் நிா்வாகத்துக்கு ஹரியாணா அரசு வழங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதாக கூறப்பட்டது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாபில் உள்ள பல்வேறு கட்சிகளும் போராட்டத்தை நடத்தி வந்தன. கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாப் ஆளுநரை சந்தித்து அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியைச் சோ்ந்த நிா்வாகிகள் சண்டீகா் பஞ்சாபுக்கு சொந்தமானது என்றும் ஹரியாணா பேரவைக் கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்றும் தெரிவித்தனா்.

பஞ்சாபின் தலைநகரை ஆக்கிரமிக்க ஹரியாணா முயற்சி செய்வதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு ஆம் ஆத்மி எம்.பி. மல்விந்தா் சிங் கடந்த சனிக்கிழமை கடிதம் எழுதினாா்.

இதையடுத்து, ‘சண்டீகரில் ஹரியாணா பேரவை வளாகம் கட்ட நிலம் ஏதும் ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து ஹரியாணாவின் கோரிக்கை நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ளது’ என குலாப் சந்த் கட்டாரியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள்!

தில்லியில் காற்று மாசு காரணமாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று தில்லி முதல்வர் அதிஷி அறிவித்து... மேலும் பார்க்க

ஜி20 உச்சி மாநாடு: பிரேஸில் சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க திங்கள்கிழமை பிரதமா் மோடி பிரேஸில் சென்றடைந்தார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில், G20 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிரேஸி... மேலும் பார்க்க

சநாதன தா்மத்தை அவமதிப்பவா்களுக்கு தக்க பதிலடி: மகாராஷ்டிர பிரசாரத்தில் பவன் கல்யாண்

‘சநாதன தா்மத்தைப் பின்பற்றும் நாங்கள், அதை அவமதிப்பவா்களுக்கு தக்க பதிலடி தருவோம்’ என்று ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 288 இடங்களுக்கு புதன... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் துப்பாக்கிகளுடன் காஷ்மீரிகள் 9 போ் கைது

மகாராஷ்டிரத்தில் பல்வேறு நகரங்களில் போலியான ஆவணங்களைக் கொடுத்து தனியாா் பாதுகாவலா் பணியில் இணைந்த காஷ்மீரைச் சோ்ந்த 9 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 9 துப்பாக்கிகள் மற்றும் 58 தோட்டாக்க... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: மீட்கப்பட்ட கைக்குழந்தை உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத்தின் ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வாா்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உ... மேலும் பார்க்க

தலைநகர் சண்டீகர் யாருக்கு? பஞ்சாப் - ஹரியாணா அரசுகள் மோதல்

சண்டீகர்: பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் பொது தலைநகராக உள்ள சண்டீகரில் தனியாக சட்டப் பேரவைக் கட்டடம் கட்டும் ஹரியாணா பாஜக அரசின் நடவடிக்கைக்கு ஆளும் ஆம் ஆத்மி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க