நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
ஹாட்ரிக் சாம்பியன்ஸ்..! 3ஆவது முறையாக ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆஸி.!
மகளிருக்கான ஐசிசி சாம்பியன்ஷிப்பை தொடர்ச்சியாக 3ஆவது முறையாக வென்றுள்ளது ஆஸ்திரேலிய மகளிரணி.
ஆஸி. அணியின் கேப்டன் அலீஸா ஹீலி தொடர்ச்சியாக 3ஆவது முறையாக ஐசிசி சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார்.
முதன்முதலாக ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் 2014-2016இல் தொடங்கப்பட்டது. அடுத்ததாக 2017-2020லும் 2022-2025 வரையிலுமான சுற்றுகளில் ஆஸி. முதலிடம் பிடித்து கோப்பையை தக்க வைத்துள்ளது.
2022-25 சுற்றில் ஆஸ்திரேலியா இந்தியாவிடம் 3-0, பாகிஸ்தானுடன் 3-0, தென்னாப்பிரிக்காவுடன் 2-1, மேற்கிந்தியத் தீவுகளிடம் 2-0 என வெற்றி பெற்றது.
இங்கிலாந்துடன் ஆஷஸ் தொடரில் 3-0 என வெற்றி பெற்றதும் கோப்பையை உறுதி செய்தது ஆஸ்திரேலிய அணி.
இது குறித்து 34 வயதாகும் அலீஸா ஹீலி கூறியதாவது:
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி வருகிறோம். அதனால் பெண்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அடுத்த சாம்பியன்ஷிப் சுற்றிலும் இதே வைப்போடு இருப்போம். ஒருநாள் உலகக் கோப்பைக்கும் இந்தப் போட்டிகள் உதவும் என்றார்.
For a record third time, Australia get their hands on the ICC Women's Championship pic.twitter.com/hVpMfCMbPq
— ICC (@ICC) January 28, 2025