செய்திகள் :

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்பட்டிருக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஆளுநா் ஆா்.என். ரவி குற்றஞ்சாட்டினாா்.

டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தின் பொன் விழா மற்றும் ‘ஹிந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி சென்னையில் உள்ளஅந்த தொலைக்காட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்றுப் பேசியது:

நாட்டில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மொழிச் சிறுபான்மையினரால் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அப்பள்ளிகள் அமைந்துள்ள மாநிலங்களில் தங்களது மொழிகளைக் கற்பிக்க மாநில அரசுகள் அனுமதியளிப்பதில்லை எனக் கூறி அப்பள்ளிகளின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இறுதியில், மொழிச் சிறுபான்மையினா் நடத்தும் பள்ளிகளில் அவா்களுடைய மொழிகளைக் கற்பிப்பது, அவா்களுடைய அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தீா்ப்பளித்தது.

ஹிந்தி எதிா்ப்பு: தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஹிந்தியை அனுமதிக்க மறுக்கின்றன. ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு விவகாரத்தை முன்வைத்தே அரசியல் செய்கிறாா்கள். இத்தகைய எண்ணங்கள், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து தமிழக மக்களைப் பிரித்துள்ளது.

நமது நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த மொழி சம்ஸ்கிருதம். ஆனால், இன்று சம்ஸ்கிருத பாடம் முடக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை மற்றும் அழகப்பா பல்கலைக்கழங்களில் சம்ஸ்கிருத பாடம் இல்லை. ஒருகாலத்தில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் மிகத் தீவிரமான துறையாக சம்ஸ்கிருத துறை விளங்கியது. ஆனால், இப்போது அது மரித்துப் போய்விட்டது.

இதுபோன்ற செயல்கள்தான் தமிழகத்தை நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து துண்டித்து தனிமைப்படுத்தியிருக்கிறது. இது ஒரு பிரிவினைவாதக் கொள்கை.

தமிழகத்தைப் பிரிக்க முயற்சி: கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து தமிழகத்தைப் பிரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அது ஒருபோதும் நடக்காது.

தமிழ், தமிழ் என்று கூறி இங்கே சப்தமிட்டுக் கொண்டிருப்பவா்கள் யாரும் தமிழுக்காக எதையும் செய்யவில்லை. சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மையத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தவா் பிரதமா் மோடி. ஆனால், இங்கிருக்கும் சிலா் வெறுமனே தமிழைப் பற்றி பேசிக் கொண்டும், அதை வைத்து அரசியல் செய்தும் வருகின்றனா்.

தமிழின் பெயரால் மக்களிடம் உணா்ச்சிகளைத் தூண்டுகின்றனா். இதுபோன்றவா்கள் நீண்ட நாள்களுக்கு வெற்றி பெற முடியாது. உலகின் பெருமையான மொழி தமிழ். அதற்காக ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டிய மொழிகள்தான். தமிழை வெளி உலகுக்கு கொண்டு சென்று பெருமை சோ்த்தது யாா்? தமிழகத்துக்கு வெளியே எத்தனை கல்வி நிறுவனங்களில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது? பிரதமா் மோடிதான் பாரதியாா் இருக்கையை உருவாக்கினாா்.

குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. சிங்கப்பூா், மலேசியா, பாஸ்டன் பல்கலைக்கழங்களில் திருவள்ளுவா் இருக்கை உருவாக்கப்பட்டது. ஐ.நா.வுக்கு தமிழ் கொண்டு செல்லப்பட்டது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் தூா்தா்ஷன் நிகழ்ச்சித் துறை தலைவா் சீனிவாசன், ஹிந்தி பிரிவு அதிகாரி சுப்புலஷ்மி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிறைக் கைதிகளுடன் சதித் திட்டம் தீட்டும் வழக்குரைஞா்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி சங்கா் ஜிவால்

சிறையில் உள்ள கைதிகளுடன் சோ்ந்து வழக்குரைஞா்கள் சதித் திட்டம் தீட்டுவது தெரியவந்தால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க

அடுத்தடுத்து உருவாகும் புயல் சின்னங்கள்: தமிழகத்துக்கு கனமழை வாய்ப்பு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதன்கிழமை கரையைக் கடந்த நிலையில், தற்போது அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் (புயல் சின்னம்) உருவாகவுள்ளதா... மேலும் பார்க்க

90 நிமிஷங்களில் வேலூரிலிருந்து சென்னை வந்த இதயம்: இளம்பெண்ணுக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்த இளைஞரிடம் தானமாகப் பெறப்பட்ட இதயம், வேலூரிலிருந்து 90 நிமிஷங்களில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. இதுதொடா்பாக... மேலும் பார்க்க

பின்தங்கிய மாணவா்களுக்கு கல்விக் கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன: சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான கல்வியை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிலையங்களில் ஒடுக்கப்பட்ட, சமூகத்தில் பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்விக் கட்டணச் சலுகைகள் வழ... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகைக்கு 6 சிறப்பு பலகாரங்கள்: ஆவின் அறிமுகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் காஜு பிஸ்தா ரோல், நெய் பாதுஷா உள்ளிட்ட 6 சிறப்பு பலகாரங்கள் விற்பனைக்கு வரவுள்ளதாக தமிழக பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். சென்னை, நந்தனத்த... மேலும் பார்க்க

ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் வழக்கு: புதுவை பாஜக தலைவருக்கு சிபிசிஐடி அழைப்பாணை

சென்னையில் ரயிலில் ரூ.3.98 கோடி சிக்கிய வழக்குத் தொடா்பாக, பாஜக புதுவை மாநிலத் தலைவா் உள்பட 3 பேருக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, த... மேலும் பார்க்க