யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்
10 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.70 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ஷிவம் துபே..!
சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே 10 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.70 ஆயிரத்தை வழங்குவதாகக் கூறியுள்ளார்.
ஆல்ரவுண்டரான ஷிவம் துபே சிஎஸ்கே அணிக்காக 2022 முதல் விளையாடி வருகிறார்.
டிஎன்எஸ்ஜேஏ (தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஜார்னலிஸ்ட் அசோசியேசன்) விருது நிகழ்வில் பங்கேற்ற ஷிவம் துபே இந்த அறிவிப்பினைக் கொடுத்தார்.
டிஎன்எஸ்ஜேஏ அளிக்கும் 30 ஆயிரத்துடன் ஷிவம் துபே 70 ஆயிரத்தை அளிக்கிறார். அதனால் இளம் தமிழ்நாட்டு வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்குமென பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிகழ்வில் பேசிய ஷிவம் துபே, “தினமும் உழைக்க வேண்டுமென நினையுங்கள். நாளைப் பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விடாதீர்கள்.
இந்தப் பணம் உங்களுக்கு மிகவும் சிறியது என்றாலும் நிச்சயமாக உதவிகரமானதாக இருக்கும். கடின உழைப்புதான் உங்களை முன்னேற்றும்.
இந்தமாதிரியாக மும்பையில் செய்கிறார்கள். ஆனால், மற்ற மாநிலங்களில் இப்படி செய்கிறார்களா எனத் தெரியவில்லை.
சிறிய தொகையாக இருந்தாலும் இளம் வயதில் மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்றார்.
உதவித்தொகைப் பெறுபவர்கள்
பிபி அபிநந்த் (டேபிள் டென்னிஸ்), கேஎஸ் வெனிஷா ஸ்ரீ (வில்வித்தை), முத்துமீனா வெள்ளச்சாமி (குண்டு எறிதல்), ஷமீனா ரியாஸ் (ஸ்குவாஷ்), ஜெயந்த் ஆர்கே, எஸ் நந்தனா (கிரிக்கெட்), கமலி பி (அலைச்சறுக்கு), ஆர் அபிநயா, ஆர்சி ஜிதின் அர்ஜுனன் (தடகளம்), ஏ தக்ஷிந்த் (செஸ்).
சிஎஸ்கே அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்து வருகிறது.
புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.