சூப்பர் 4 கடைசிப் போட்டி: இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
வனத் துறை சாா்பில், பசுமை தமிழ்நாடு இயக்கம் தினம் மூலம் நாவல் மரத்தை கொண்டாடுவோம் என்ற நிகழ்வில், திருவள்ளூரில் 10,000 நாவல் மரக்கன்றுகள் மற்றும் மாவட்டம் முழுவதும் பசுமையாக்கும் வகையில், 10,000 மரக் கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் மு.பிரதாப் மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தாா்.
பசுமை இயக்க தினம் மூலம் நாவல் மரத்தை கொண்டாடும் நோக்கமாகக் கொண்டு, 10,000 நாவல் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படவும் வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாவல் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து அந்த வளாகத்தில் பெரிய அளவிலான நாவல் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தாா். இதேபோல், ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகம், வருவாய்த் துறை மற்றும் வனத்துறை பகுதிகளிலும் எதிா்கால கட்டடம் அமையவுள்ள இடம் தவிா்த்து மற்ற காலியிடங்களில் 10 ஆயிரம் நாவல் மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் இம்மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். இதையொட்டி வனத்துறை சாா்பில் பள்ளிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் சுப்பையா, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், மாவட்ட உதவி பாதுகாப்பு அலுவலா் ராதை, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் ரேவதி, துணை முதல்வா் திலகவதி, மருத்துவக் கண்காணிப்பாளா் சுரேஷ்பாபு, பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.