செய்திகள் :

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள்!

post image

தில்லியில் காற்று மாசு காரணமாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று தில்லி முதல்வர் அதிஷி அறிவித்துள்ளார் .

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் தலைநகர் தில்லியில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளது. பனியைப் போல எங்கும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. தில்லியின் காற்று தரக் குறியீடு மிகவும் மோசமடைந்து நேற்று மாலை 441 அளவிலும், போகப்போக 457 அளவிலும் அதிகமாகியுள்ளது.

இந்த நிலையில், காற்று தர மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே உள்ள 1,2,3 ஆம் நிலை கட்டுப்பாடுகளுடன் இன்று (நவ. 18) காலை 8 மணி முதல் 4 ஆம் நிலைக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தில்லி காற்று மாசு: 107 விமானங்கள் தாமதம்! 3 விமானங்கள் ரத்து!

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள பள்ளிக் கல்வித்துறைக் கொடுத்துள்ள சுற்றறிக்கையின்படி, ‘தில்லியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் அனைத்து மாணவர்களுக்கும் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நவம்பர் 18 முதல் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்பட வேண்டும். 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல நேரடி வகுப்புகள் செயல்படும் என உத்தரவிடப்படுகிறது’ என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், நேரடி வகுப்புகளுக்குப் பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை, தில்லி முதல்வர் அதிஷி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | தில்லி-என்.சி.ஆா் இல் திடக்கழிவு மேலாண்மையில் தோல்வி உச்சநீதிமன்றம் கண்டனம்

காற்று மாசு காரணமாக அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் மற்றும் சுத்தமான எரிபொருளைப் பயன்படுத்தும் கனரக வாகனங்கள் மட்டுமே தில்லி நகருக்குள் அனுமதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மின்சாரம் மற்றும் பி.எஸ். 6 டீசல் வாகனங்கள் தவிர தில்லி பதிவெண் இல்லாத இலகுரக வாகனங்களுக்கும் நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட நாயகி! தன்னந்தனியாக உத்தரகண்ட் கிராமத்தில் வாழும் 80 வயதுப் பெண்!

உத்தரகண்ட் மாநிலம், கட்திர் என்ற கிராமமே ஏதோ பேய் படங்களில் வரும் கிராமத்தைப் போல காணப்பட்டாலும், அந்த கிராமத்துக்கு இன்னமும் உயிர்த் துடிப்பாய் வாழ்ந்துகொண்டிருப்பவர் ஹீரா தேவி. இவருக்கு வயது 80. இவர... மேலும் பார்க்க

இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை உடைப்போம்: ராகுல் காந்தி

மகாராஷ்டிரத்தில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, நாட்டில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உறுதியளித்தார். இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் ... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தார் கைலாஷ் கெலாட்!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்துள்ளார். தில்லி அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் நேற்று அமைச்சர் மற்றும் ஆம் ஆத்மியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார். அவரின் ராஜிநாமாவை ... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவர் பலி: ராகிங் செய்த 15 பேர் மீது வழக்குப்பதிவு!

குஜராத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் ராகிங் காரணமாக பலியானதைத் தொடர்ந்து சீனியர் மாணவர்கள் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்து... மேலும் பார்க்க

தில்லியில் அதிகரிக்கும் மாசு: முகக்கவசம் விநியோகித்த பாஜகவினர்!

மத்திய மாசுக் கட்டுப்பாட்டின்படி காற்றின் தரம் கடுமையான பிரிவில் இருப்பதால் தில்லி பாஜக தலைவர் விரேந்திரா சச்தேவா மற்றும் பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் மத்திய செயலக மெட்ரோ நிலையத்தில் பொதுமக்... மேலும் பார்க்க

ஜான்ஸி மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட ஹீரோ! ஆனால்..

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்ஸியில் உள்ள மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தீ பற்றிய அடுத்த வினாடியே சற்றும் யோசிக்காமல், யாகூப் மன்சூரி தீப்பற்றி எரிந்துகொண்டிருந்... மேலும் பார்க்க