செய்திகள் :

``112 நாடுகளில் ஆய்வு; இந்தியாவில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகம்..'' -ஐ.நா அறிக்கை

post image

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி (OPHI) இணைந்து ஒரு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில், உளகளவில் 112 நாடுகளில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான வறுமையில் வாடுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக வெளியான அந்த ஆய்வறிக்கையில், ``உலகளவில் வாழும் சுமார் 600 கோடி மக்கள் தொகையில், 100 கோடி மக்கள் வறுமையை எதிர்கொள்கின்றனர். மேலும், இவர்கள் சார்ந்த குடும்பம் சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவை உள்ளிட்ட10 குறியீடுகளில் ஏதேனும் ஒன்றில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

உணவு, தண்ணீருக்காக காத்திருக்கும் குழந்தைகள் - காஸா

உலகளவில் 58.6 கோடி, அதாவது, 27.9 சதவீத குழந்தைகள் வறுமையில் வாழ்கின்றனர். பெரியவர்களை விட 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் வறுமையில் சிக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நாடுகளுக்கு இடையேயான போர் உள்ளிட்ட பதற்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வறுமை விகிதம் இருமடங்காக அதிகரித்து, 34.8 சதவிகிதமாகவும், போர் மோதல்களால் பாதிக்கப்படாத நாடுகளில் 10.9 சதவிகிதமும் வறுமை அதிகரித்திருக்கிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக நாடுகளுக்கிடையான மோதல் போக்கு தீவிரமடைந்து, உயிரிழப்புகளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மில்லியன் கணக்கான மக்கள் வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்ந்து, வாழ்வதற்காக சூழலுக்குகாக ஏங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உலக அளவில் போரினால் பாதிப்படைந்த  நாடுகளில் 40 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். இவர்களில், 218 மில்லியன் மக்கள் போர் நடைபெறும் நாடுகளிலும், 335 மில்லியன் மக்கள் மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும், 375 மில்லியன் மக்கள் அமைதியற்ற சூழலிலும் வாழ்கின்றனர்.

வறுமை

83 சதவிதத்துக்கும் அதிகமான வறுமையில் வாழும் மக்கள் கிராமப்புறங்களில் தான் வாழ்கின்றனர்.  நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமங்களின் வறுமை விகிதம் 28 சதவிகிதம் அதிகமாக உள்ளது. 1.1 பில்லியன் நபர்களில் கணிசமானோருக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லை. 828 மில்லியன் மக்களுக்கு போதுமான சுகாதாரம் இல்லை. 886 மில்லியன் மக்களுக்கு சரியான வீடுகள் இல்லை, 998 மில்லியன் மக்களுக்கு சமையல் எரிபொருளுக்கான அணுகல் இல்லை, 637 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேல், ஊட்டச்சத்து குறைபாடுடன் வாழ்கிறார்கள். இந்தியாவில் 23.4 கோடி மக்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். உலகளவில் அதிக வறுமையான மக்கள் வாழும் இடமாக இந்தியா முதலிடத்தில் இருக்கிறது." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`தீபாவளி' ரெய்டு: அதிகாரிகள் காட்டில் பணமழை; விடாமல் துரத்தும் விஜிலென்ஸ் - ஒரே நாளில் இவ்வளவா?!

தீபாவளி நெருங்கியதையொட்டி, தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பெறுவதை தடுக்கும் நோக்கத்தி... மேலும் பார்க்க

`+91-xxx..’ உள்நாட்டு அழைப்பு போன்றே வரும் வெளிநாட்டு மோசடி அழைப்புகள் - புதிய அமைப்பின் பலன் என்ன?

டிஜிட்டல் மயமாகி வரும் நாட்டில் அதிகரித்து காணப்படும் சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், உள்நாட்டு எண்கள் போலவே, போலியாக வரும் சர்வதேச அழைப்புகளைத் தடுக... மேலும் பார்க்க

Dengue: டெங்குவால் நிகழும் உயிரிழப்புகள் குறைந்திருக்கிறதா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்வதென்ன?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடப் பணிகளைத் தமிழக... மேலும் பார்க்க

`ரயில்வே கம்பளிப் போர்வை' - வெளியான RTI தகவல்; நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க செய்ய வேண்டிதென்ன?

ரயிலில் ஏசி பெட்டிகளின் பயணம் செல்லும்போது, அங்கு வழங்கப்படுக்கிற வெள்ளை நிற போர்வைகளையும் கம்பளிப் போர்வையையும் பெரும்பாலானோர் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அந்தப் போர்வைகள் சுத்தமாக பராமரிக்கப்படுக... மேலும் பார்க்க

வயநாடு: `தந்தைக்காக 17 வயதில் பிரசாரம்; இன்று எனக்காக..!” - சென்டிமென்ட் பிரியங்கா

வயநாடு நாடாளுமன்ற தொகுதி எம்.பி‌ பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்த நிலையில், அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற நவம்பர் 13 -ம் தேதி நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சி... மேலும் பார்க்க