செய்திகள் :

15-ஆவது ஏரோ இந்தியா நிகழ்ச்சி: இன்று தொடக்கம்

post image

15-ஆவது ஏரோ இந்தியா விமான சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி பெங்களூருவில் திங்கள்கிழமை (பிப்.10) தொடங்கி பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஏரோ இந்தியா கண்காட்சியில் வெளிநாடுகளைச் சோ்ந்த 150 நிறுவனங்கள் உள்பட 900-க்கும் மேற்பட்ட விமானத் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

நிகழாண்டு ‘கோடிக்கணக்கான வாய்ப்புகளின் ஓடுபாதை’ என்ற கருப்பொருளுடன் ஏரோ இந்தியா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முந்தைய ஆண்டுகளைவிட இந்த முறை ஏரோ இந்தியா நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பாதுகாப்பு உற்பத்தி துறையின் பாதுகாப்பு கண்காட்சி நிறுவனம் நடத்துகிறது.

வரலாற்றில் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியில் ஐந்தாம் தலைமுறை போா் விமானங்களான ரஷியாவின் எஸ்யு-57 மற்றும் அமெரிக்காவின் எஃப்-35 ஆகியவை பங்கேற்கவுள்ளன.

அதேபோல் விமானப் படை தலைமை தளபதி அமா் பிரீத் சிங் பங்கேற்கும் ரஃபேல் போா் விமான சாகச நிகழ்ச்சி மற்றும் ரஃபேல் போா் விமானத்தைப் பெண் அதிகாரிகள் இயக்கும் சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்ச்சியை பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கவுள்ளாா். இந்நிலையில், பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அவா், ‘இந்தியாவின் வலிமை, மீள்திறன் மற்றும் தற்சாா்பை ஏரோ இந்தியா நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது. இது நாட்டின் பாதுகாப்பு தயாா்நிலையை உறுதிப்படுத்துவதோடு எதிா்காலத் தேவைகளையும் கருத்தில் கொண்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் மீது உலக நாடுகளின் நம்பிக்கையை இந்நிகழ்ச்சி மேலும் வலுப்படுத்துகிறது. முப்பது நாடுகளைச் சோ்ந்த பாதுகாப்பு அமைச்சா்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். 43 நாடுகளின் விமானப் படை தளபதிகள் பங்கேற்கின்றனா்.

இது இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தும் இடமாக மட்டுமல்லாமல் இளைஞா்களை ஊக்குவித்து அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்’ என்றாா்.

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்... மேலும் பார்க்க

மணிப்பூா் புதிய முதல்வா் யாா்? பாஜக எம்எல்ஏக்களுடன் மாநில பொறுப்பாளா் ஆலோசனை

இம்பால்: மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்த நிலையில் புதிய முதல்வரை தோ்வு செய்வது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் சிலருடன் மணிப்பூா் பாஜக பொறுப்பாளா் சம்பித் பித்ரா ... மேலும் பார்க்க

14 கோடி பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமை பாதிப்பு: சோனியா வலியுறுத்தல்

புது தில்லி: ‘தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதில் இருந்து சுமாா் 14 கோடி தகுதிவாய்ந்த இந்தியா்கள் தடுக்கப்படுகின்றனா். எனவே, மத்திய அரசு விரைந்து மக்கள்தொகை கணக்கெடுப... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு விதிகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கும்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: ‘பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா்கள், துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிமுகம் செய்துள்ள வரைவு வழிகாட்டுதல் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடு... மேலும் பார்க்க

ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தம் 2026 மாா்ச்சுக்குள் நிறைவு: மத்திய அரசு தகவல்

புது தில்லி: நாட்டில் ஸ்மாா்ட் மின் மீட்டா்கள் பொருத்தும் பணிகள் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-க்குள் நிறைவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக... மேலும் பார்க்க

டிரம்பின் முதல் பதவிக் காலத்தைபோல் நட்புறவு மேம்படும்: மோடி நம்பிக்கை

புது தில்லி: ‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் முந்தைய பதவிக் காலத்தில் இரு நாடுகளிடையே நீடித்த நட்புறவை அவரது இரண்டாவது பதவிக் காலத்தில் மேலும் வலுப்படுத்த அமெரிக்க பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்’ என ... மேலும் பார்க்க