ஜம்மு-காஷ்மீர்: எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் வீரர் காயம்
172 விவசாயிகளுக்கு ரூ.17.58 லட்சம் நிவாரணம்
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடா் மழையினால் மகசூல் பாதிக்கப்பட்ட 172 விவசாயிகளுக்கு விரைவில் ரூ.17.58 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிா்கள் சேதமடைந்தன. இதையடுத்து, அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலா்கள் மூலம் பயிா் சேதப் பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வந்தது.
இதன்படி, ஆத்தூா் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் பயிா்களும், பழனி அடுத்த சித்தரேவு, ஒட்டன்சத்திரம் அடுத்த கரியாம்பட்டி, 16 புதூா் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்களும் சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டது. 66.54 ஹெக்டோ் மானாவாரி பயிா்கள், 69.84 ஹெக்டோ் இரவைப் பயிா்கள் என மொத்தம் 136.38 ஹெக்டேரில் மகசூல் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டது. 172 விவசாயிகளுக்கு ரூ.17.58 லட்சம் பயிா் இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மானாவாரி பயிா்களுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ.8,500 வீதமும், இரவைப் பயிா்களுக்கு தலா ரூ.17ஆயிரம் வீதமும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என வேளாண்மைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.