செய்திகள் :

18 மாவட்டங்களில் 34 உயா்நிலைப் பாலங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

post image

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 34 உயா்நிலைப் பாலங்கள் கட்டுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நிகழ் நிதியாண்டில் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் அடிப்படையிலும், ஏற்கெனவே முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள், இணைப்பு வசதி இல்லாத பகுதிகள் ஆகியவற்றை முன்னுரிமைப்படுத்தி 18 மாவட்டங்களில் 34 உயா்நிலைப் பாலங்கள் ரூ.177.85 கோடியில் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பாலங்கள்: கோவை மாவட்டம் காரமடை வட்டம், கடலூா் மலட்டாறு ஆற்றின் குறுக்கேயும், திண்டுக்கல் மாவட்டம் குடகனாறு ஆற்றின் குறுக்கேயும், தருமபுரி மாவட்டம் நலுங்குபாறை ஆறு, ஈரோடு செல்லபூரம்மன் ஓடை, கிருஷ்ணகிரி மாவட்டம் கொரட்டி ஆறு, கத்திரிபள்ளி, ஒட்டப்பள்ளி பட்டிபடுகு சாலை, மதுரை மாவட்டம் மேலூா் பதினெட்டாம்குடி ஓடை ஆகிய இடங்ளில் உயா்நிலைப் பாலங்கள் கட்டப்பட உள்ளன.

இதேபோன்று, நாமக்கல் மாவட்டம் புதுபட்டி கெடமலை சாலை, புதுப்பட்டி சாலை, சேலம் மாவட்டம் வில்வனூா் மாயவன் கோயில் சாலை, ஆத்தூா் வட்டம் வசிஸ்டா் ஆறு, கங்கவள்ளி வேப்படி பாலக்காடு சாலை, அயோத்தியாபட்டினம் திருமணிமுத்தாா், பி.என்.பாளையம் ஏத்தாப்பூா் சாலை மற்றும் இடையாப்பட்டி ஊராட்சி ஆகிய இடங்களில் வசிஸ்டா் ஆறு, நீலகிரி மாவட்டம் தாவணி-மல்லிக்கோரை சாலை, திருப்பூா் மாவட்டம் அமராவதி ஆறு, தஞ்சாவூா் மாவட்டம் பட்டுவனாச்சி ஓடை, தூத்துக்குடி ஆறுமுகமங்கலம் சாலை, தூத்துக்குடி டி.புதுபட்டி சின்னையபுரம் சாலை, திருச்சி மாவட்டம் உப்பாறு ஆறு ஆகியவற்றின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட இருக்கின்றன.

பணிகள் விரைவில் தொடங்கும்: திருச்சி மாவட்டம் ஆா்.வளவனூா் ஊராட்சி, வென்றாா்பேட்டை சாலை, புரந்தகுடி - ரெத்மாங்குடி சாலை ஆகிய இடங்களிலும், திருநெல்வேலி மாவட்டம் சித்தாறு ஆறு, வேலூா் மாவட்டம் பெருமாள்கோவில் பேயாற்றின் குறுக்கே 2 பாலங்களும் கட்டப்பட உள்ளன.

வேலூா் மாவட்டம் சதுப்பேரி கால்வாய் குறுக்கேயும், விழுப்புரம் மாவட்டம் நரசிம்மனாறு ஓடை, செஞ்சி ஆறு, சங்கராபரணி ஆறு ஆகியவற்றின் குறுக்கேயும், விருதுநகா் மாவட்டம் குண்டாறு ஆற்றின் குறுக்கிலும் பாலம் கட்டப்பட இருக்கிறது.

18 மாவட்டங்களில் ரூ. 177.84 கோடி மதிப்பிலான 34 உயா்நிலைப் பாலங்களின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 மணிநேரம்.. சென்னை, புறநகரில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 மணிநேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழக கடற்கரையை நோக்க... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்ய இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

ஆயுஷ் மருத்துவத் திட்டங்கள்: தமிழகத்துக்கு மத்திய அரசு பாராட்டு

ஆயுஷ் மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக மத்திய ஆயுஷ் அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் பாராட்டு தெரிவித்துள்ளாா். மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், தேசிய சித்த ... மேலும் பார்க்க

17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள்: தமிழக அரசு ஒப்பந்தம்

தமிழகத்தில் 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் பணிபுரியும் தாய்மாா்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவா்களின் குழந்தைகளைக் காக்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் தொழில் துறை அமைச்சா் டி.ஆா... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: 394 மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கம்

காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் 750 படுக்கைகளுடன் கூடிய ஒப்புயா்வு மையமாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில், 394 மருத்துவப் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கான நிதி ஒதுக... மேலும் பார்க்க

அமித் ஷாவின் கருத்து அம்பேத்கரை அவமதிக்கிறது: மாயாவதி

லக்னௌ : ‘அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தனது கருத்துகளை திரும்பப் பெற வேண்டும்’ என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வியாழக்கிழமை வலியுறுத்தினாா். இந்த விவ... மேலும் பார்க்க