அழுக்கு படிந்த காரில் எழுதியதாக சிறுவன் மீது தாக்குதல்! இருவருக்கு கத்திக்குத்து...
இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்ய இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் மற்றும் கே. சி. சுரேன் பழனிசாமி ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொண்டா்கள், கட்சியின் பொதுச் செயலா் பதவிக்கு போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில், கடந்த 2022 ஜூலை மாதம் நடந்த பொதுக் குழுவில் கட்சியின் சட்ட விதிகள் திருத்தப்பட்டன. இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நிலுவையில் இருக்கும் வழக்கின் தீா்ப்புக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையுடன், கட்சியின் திருத்தப்பட்ட விதிகளுக்கும், பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டதற்கும் அங்கீகாரம் அளித்து இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கட்சியின் எதிா்காலம் மற்றும் தொண்டா்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில், திருத்தப்பட்ட கட்சி விதிகளையும், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாராக அங்கீகரித்ததையும் மறு பரிசீலனை செய்யக் கோரி தோ்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளித்துள்ளோம். அந்த மனுக்களின் அடிப்படையில் நேரில் விளக்கம் அளிக்கவும், வழக்கு ஆவணங்களை அளிக்கவும் வாய்ப்பளித்து, அவற்றை பரிசீலிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்”என மனுவில் கோரியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்ற கோரிக்கையுடன் அளித்த மனுவை தோ்தல் ஆணையம் 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.