பாதுகாப்புத் துறை சோதனையில் துப்பாக்கி, நவீன வெடிகுண்டு கைப்பற்றல்!
ரயில் ஓட்டுநருக்கு உடல்நலக் குறைவு: சப்தகிரி விரைவு ரயில் வழியில் நிறுத்தம்
திருவள்ளூர்: ரயில் ஓட்டுநர்ருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் சப்தகிரி விரைவு ரயில் வழியிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் புறநகர் ரயிலை பிடித்து சென்னை சென்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
மேலும் பத்து மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்பட்டிருந்ததால் மாற்று ரயில் ஓட்டுநரை நியமித்து ரயிலை இயக்கி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த சப்தகிரி விரைவு ரயில் புதன்கிழமை இரவு திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே வந்த கொண்டிருந்த போது ரயில் ஓட்டுநர் யுகேந்திரனுக்கு திடீரென வயிற்று வலியால் துடித்த நிலையில், ரயிலை திருவள்ளூரில் நிறுத்தினார். இதையடுத்து அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிக்க |சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு!
சப்தகிரி விரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் 3 ஆவது நடைமேடையில் வெகுநேரம் ரயில் நின்று கொண்டிருந்தன.
இதையடுத்து ரயிலில் பயணித்த பயணிகள் அந்த வழியாக வந்த மின்சார ரயிலை பிடித்து சென்னை சென்ரல் புறப்பட்டனர்.
பிறகு சுமார் 10 மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்தகிரி விரைவு ரயிலை இயக்குவதற்கு புதிய ரயில் ஓட்டுநர் கலையரசன் என்பவரை ரயில்வேதுறை அதிகாரிகள் நியமித்தனர்.
இதையடுத்து சப்தகிரி விரைவு ரயில் சென்னை சென்ரல் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது.
மேலும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ரயில் ஒட்டுநர் யுகேந்திரன் நலனை கருதில் கொண்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.