செய்திகள் :

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன? அறிக்கை தாக்கல்

post image

முப்படைகளின் முன்னாள் தளபதி பிபின் ராவத் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் விபக்குள்ளான சம்பவம் குறித்து மக்களவையில் பாதுகாப்புத்துறை நிலைக்குழு வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2021 டிசம்பர் 8-ஆம் தேதி கோவை வந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவத் தளத்தில் நடைபெறவிருந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.

எம்ஐ-17 வி5 ரக விமானப் படையின் ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 12 அதிகாரிகள் பயணித்தனர்.

பகல் 1 மணியளவில் வெலிங்டனில் தரையிறங்க சில நிமிடங்களுக்கு முன்னதாக, மலையின் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஹெலிகாப்டரை இயக்கி குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்ற நிலையில், ஒரு வாரத்துக்கு பிறகு அவரும் உயிரிழந்தார்.

நிலைக்குழு அறிக்கை

இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மக்களவையில் பாதுகாப்புத் துறை நிலைக்குழு வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதில், 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் மட்டும் மொத்தமாக இந்திய விமானப் படைக்கு சொந்தமான 34 விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானது.

2021 முதல் 2022 வரையிலான ஓராண்டில் பிபின் ராவத் ஹெலிகாப்டர் உள்பட 9 விபத்துகள் நடந்துள்ளன. இதில், பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் மனித பிழையே (ஏர் க்ரூ) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அயோத்தி போன்ற பிரச்னைகளை வேறு எங்கும் எழுப்பாதீர்கள்! ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு

முன்னதாக, விபத்து நடந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில், திடீரென சூழ்ந்த மேகக் கூட்டங்களால் எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்திருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி, காக்பிட் குரல் பதிவுகள் உள்ளிட்டவை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு மனித குரலே காரணம் என்று பாதுகாப்பு நிலைக்குழு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தில்லி பாஜக அலுவலகம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பீதி

தில்லியில் உள்ள பாஜக மாநில அலுவலகம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு நிலவியது. தலைநகர் தில்லியில் பாஜக மாநில அலுவலகம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெடிகுண்டு பீதி... மேலும் பார்க்க

முகலாயப் பேரரசரின் சந்ததியினர் ரிக்‌ஷா இழுக்கின்றனர்! யோகி ஆதித்யநாத் சர்ச்சை பேச்சு

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் வழித்தோன்றல்கள் ரிக்‌ஷா இழுப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்... மேலும் பார்க்க

1984 என அச்சிடப்பட்ட கைப்பை: பிரியங்கா காந்திக்கு பரிசளித்த பாஜக எம்.பி.

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ராவுக்கு 1984 என அச்சிடப்பட்ட கைப்பையை பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி பரிசாக வழங்கியுள்ளார். காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி பாலஸ்தீன் மற்றும் வங்கதேசம் பற்றிய செய்தி... மேலும் பார்க்க

பார்சலில் ஆண் சடலம்! பெண் அதிர்ச்சி!!

ஆந்திரத்தில் பெண்ணுக்கு வந்த பார்சலில் ஆணின் சடலம் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசத்தில் நாகதுளசி என்ற பெண், வீடு கட்டுவதற்காக நிதி கோரி, க்ஷத்திரிய சேவை சமிதியில் விண்ணப்பித்திருந... மேலும் பார்க்க

மக்களவைத் தலைவரின் தேநீர் விருந்தை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தநிலையில், மக்களவைத் தலைவரின் தேநீர் விருந்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புறக்கணித்தனர். கடந்த நவ. 25 ஆம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியநிலையில் அதானி விவகாரம், மண... மேலும் பார்க்க

தில்லி போதை மறுவாழ்வு மையம் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்!

தில்லியில் போதை மறுவாழ்வு மையம் என்ற பெயரில், அரசு அனுமதி எதுவும் இன்றி இயங்கி வந்த மையமே, போதைக்கு அடிமையாக்கும் மையமாக இயங்கி வந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.போதைக்கு அடிமையானவர்களின... மேலும் பார்க்க