BB Tamil 8: `ஸாரி பிக் பாஸ், வேணும்னே பண்ணல...' - கலங்கும் முத்துக்குமரன் - நடந்தது என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் தற்போது தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, ரஞ்சித், ராணவ், ரயான், செளந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, மஞ்சரி ஆகிய 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த வாரத்திற்கான டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்ட முத்துக்குமரன், பவித்ரா, ஜெப்ஃரி மூவரும் அடுத்த வார கேப்டன்சி டாஸ்க்கில் பங்கேற்றனர்.
அப்போது முத்துக்குமரன் பவித்ராவுக்கு விட்டுக்கொடுத்து விளையாடினார். எச்சரிக்கையை மீறி மீண்டும் விட்டுக்கொடுத்து விளையாடியதால் கேப்டன்ஸி டாஸ்க் இந்த வாரம் ரத்து செய்யப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார். மேலும் இனிமேல் நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சியடைய முத்துக்குமரன் உடைந்து அழுதார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரோமோவில் 'ஸாரி பிக் பாஸ், வேணும்னே பண்ணல.இந்த ஒரு தடவ மன்னிச்சுருங்க பிக் பாஸ் ' என்று முத்துக்குமரன் அழுகிறார்.
'இந்த தண்டனை நீ பண்ண தப்புக்கு மட்டும் கிடைக்கல. எல்லாரும் பண்ண தப்புக்காகத்தான் கிடைச்சது' என்று ஜாக்குலின் உட்பட ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் முத்துக்குமரனுக்கு ஆறுதல் சொல்கின்றனர். பிறகு ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் சேர்ந்து பிக் பாஸிடம் மன்னிப்புக் கேட்கின்றனர்.