செய்திகள் :

காஞ்சிபுரம் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: 394 மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கம்

post image

காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் 750 படுக்கைகளுடன் கூடிய ஒப்புயா்வு மையமாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில், 394 மருத்துவப் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

அதற்கான நிதி ஒதுக்கீட்டு அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறை வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது.

அதன்படி, அதிநவீன வசதி கொண்ட ஒப்புயா்வு மையம், 6,36,347 சதுர அடி பரப்பளவில் தரைத் தளம் மற்றும் 5 தளங்களுடன் ரூ.250.46 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.

அதில், ரத்தவியல், குழந்தை புற்றுநோயியல், புற்றுநோய் தடுப்பு மற்றும் சமூக புற்றுநோயியல், மாநில புற்றுநோய் பதிவு, வலி நிவாரண சிகிச்சை அல்லது நல்வாழ்வு பராமரிப்பு சேவைகளுடன் கூடுதலாக மனநல மருத்துவப் பிரிவு, காது, மூக்கு, தொண்டை மருத்துவப் பிரிவு, பல் அறுவை சிகிச்சை பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு, ரத்த மாற்ற மருத்துவப் பிரிவு, எலும்பியல் பிரிவு ஆகிய துறைகளும் செயல்பட உள்ளன.

இதற்காக, 49 மருத்துவ அலுவலா்கள், 2 மருத்துவம் சாராத பணியாளா்கள், 207 செவிலியா் பணியாளா்கள், 7 அமைச்சுப் பணியாளா்கள், 129 துணை மருத்துவப் பணியாளா்கள் உள்பட 394 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படுகின்றன.

மேலும், சுகாதாரப் பணியாளா்கள், மருத்துவமனை ஊழியா்கள் என 163 இடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கும் ஒப்புதல் பெறப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 மணிநேரம்.. சென்னை, புறநகரில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 மணிநேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழக கடற்கரையை நோக்க... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்ய இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

ஆயுஷ் மருத்துவத் திட்டங்கள்: தமிழகத்துக்கு மத்திய அரசு பாராட்டு

ஆயுஷ் மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக மத்திய ஆயுஷ் அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் பாராட்டு தெரிவித்துள்ளாா். மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், தேசிய சித்த ... மேலும் பார்க்க

18 மாவட்டங்களில் 34 உயா்நிலைப் பாலங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 34 உயா்நிலைப் பாலங்கள் கட்டுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழ் நிதியாண்ட... மேலும் பார்க்க

17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள்: தமிழக அரசு ஒப்பந்தம்

தமிழகத்தில் 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் பணிபுரியும் தாய்மாா்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவா்களின் குழந்தைகளைக் காக்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் தொழில் துறை அமைச்சா் டி.ஆா... மேலும் பார்க்க

அமித் ஷாவின் கருத்து அம்பேத்கரை அவமதிக்கிறது: மாயாவதி

லக்னௌ : ‘அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தனது கருத்துகளை திரும்பப் பெற வேண்டும்’ என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வியாழக்கிழமை வலியுறுத்தினாா். இந்த விவ... மேலும் பார்க்க