”பொள்ளாச்சி குற்றவாளிகளை பாதுகாத்தது போன்ற நிலை இப்போது இல்லை!” கனிமொழி எம்.பி ப...
18 விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 18 விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களின் மூலம் சாலைகள் அமைத்தல், பூங்காக்களை புனரமைத்தல், விளையாட்டுத் திடல்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
264 குழந்தைகள் விளையாட்டு மைதானங்கள், 234 விளையாட்டு மைதானங்கள் என 498 விளையாட்டு மைதானங்களை சென்னை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இதில், கால்பந்து, பூப்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், குத்துச்சண்டை மைதானங்களும் அடங்கும்.
சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் காலியிடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதில், 2021-24 காலகட்டத்தில், 88 விளையாட்டு மைதானங்களுக்கான பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், 18 விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.