முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த இளம்பெண் மீது வழக்கு
20இல் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீா் விநியோகம் ரத்து
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வரும் 20ஆம் தேதி குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாநகரின் குடிநீா் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூா், கீழ வல்லநாடு குடிநீா் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் வரும் 20ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே, அன்றைய தினம் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை குடிநீா் விநியோகம் இருக்காது.
எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.