செய்திகள் :

2023ல் சராசரியாக நாள்தோறும் 140 பெண்கள் கொலை! அதுவும் குடும்பத்தினரால்!!

post image

கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் சராசரியாக நாள்தோறும் 140 பெண்கள் அவர்களது வாழ்க்கைத் துணை அல்லது உறவினர்களால் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டிருக்கும் தரவுகளில் தெரிய வந்துள்ளது.

இதன் மூலம், பெண்களுக்கு மிக ஆபத்தான இடமாக அவர்கள் வாழும் வீடே மாறியிருப்பதாகவும், கடந்த 2023ஆம் ஆண்டின் தரவுகளை ஐக்கிய நாடுகள் அவையின் இரு அமைப்புகள் வெளியிட்டிருக்கும் தரவுகள் கூறுகின்றன.

ஐ.நா. அவை வெளியிட்ட தரவுகளில், கடந்த 2023ஆம் ஆண்டில் சுமார் 51 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் அவர்களது வாழ்க்கைத் துணை அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்பட்டிருப்பதாக, ஐக்கிய நாடுகள் அவையின் பெண்கள் அமைப்பும், போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகமும் இணைந்து வெளியிட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

சர்வதேச பெண்களுக்கான வன்முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை மற்றொன்றையும் தெரிவித்துள்ளது. அதாவது, பெண்கள் கொலை செய்யப்படுவது அதிகரிக்கவில்லை, மாறாக, கொலை செய்யப்படும் பெண்களின் தகவல்கள் கிடைப்பது அதிகரித்துள்ளது என்று விளக்கியிருக்கிறது.

இதையும் படிக்க.. இந்தியாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்.. எலான் மஸ்க் புகழாரம்! எதைச் சொல்கிறார்?

பாலின ரீதியாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது நடக்கும் இதுபோன்ற மிகக் கொடூரமான வன்முறைகள் எல்லா இடங்களிலும் தொடர்வதாகவும், எந்த ஒரு மாகாணமும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்றும், இந்தக் காலக்கட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் அபாயகரமான இடமாக மாறியியிருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த இந்தப் படுகொலையில் ஆப்ரிக்கா முதலிடத்தில் உள்ளது. கணவர் அல்லது குடும்பத்தினரால் கடந்த 2023ல் மட்டும் ஆப்ரிக்காவில் 21,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் 1 லட்சம் பெண்களில் 2.9 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், விகிதத்திலும் ஆப்ரிக்காவே முதலிடத்தில் உள்ளதாம்.

தரையிறங்கியபோது தீப்பிடித்த ரஷிய விமானம்: பயணிகள் உயிர்த்தப்பியது எப்படி?

ரஷியாவில் பயணிகள் விமானம் தரையிறங்கியபோது விமானத்தின் என்ஜின் தீப்பிடித்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரஷியாவின் ரிசார்ட் நகரமான சோச்சியில் இருந்து துருக்கியின் அந்தாலியா விமான நிலையத்திற்கு அஜிமுத்... மேலும் பார்க்க

இந்தியாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்.. எலான் மஸ்க் புகழாரம்! எதைச் சொல்கிறார்?

இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பதிவான 64 கோடி வாக்குகள் ஒரே நாளில் எண்ணி முடிக்கப்பட்டுவிட்டது, ஆனால் கலிஃபோர்னியாவில் இன்னமும் வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கிறது என்று அமெரிக்க தேர்... மேலும் பார்க்க

மூன்றாம் பாலினத்தவர்களை ராணுவத்திலிருந்து நீக்க முடிவெடுத்துள்ள டிரம்ப்!

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை ஆட்சிக்கு வந்தவுடன் பணிநீக்கம் செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் மாயமான யூத மத குரு கொலை

ஐக்கிய அரபு அமீரகத்தில் காணாமல்போன மால்டோவா நாட்டைச் சோ்ந்த இஸ்ரேல் குடியுரிமை பெற்ற யூத மத குரு பயங்கரவாத சம்பவத்தில் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது. இதுகுறித்து இஸ்... மேலும் பார்க்க

ஜோா்டான்: இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியவா் சுட்டுக் கொலை

ஜோா்டான் நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா். இஸ்ரேலின் அண்டை நாடான ஜோா்டான் தலைநகரம் அம்மான் அருகே ரபியாவில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதி... மேலும் பார்க்க

எலான் மஸ்க், விவேக் ராமசாமி சவால்: சீனா அச்சம்

‘அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைமையில் புதிய துறையை உருவாக்கும் டொனால்ட் டிரம்ப்பின் திட்டம் சீனாவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என சீன அரசின் கொள்கை ஆலோசகா் தெரிவி... மேலும் பார்க்க