செய்திகள் :

2024-ல் குற்ற வழக்குகள் குறைவு: தமிழக அரசு

post image

சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான வழக்குகள் 2024ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2024ம் ஆண்டிற்கான குற்ற வழக்குகளில், பதிவான வழக்குகள் அவற்றின் தன்மை, மற்றும் வகைப்பாடுகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட பகுப்பாய்வின் வெளிப்பாடு கீழே வழங்கப்பட்டுள்ளது.

1.  சொத்துக்கு எதிரான குற்றங்கள்

2023 ஆம் ஆண்டில் பதிவான ஆதாயக்கொலை வழக்குகளின் எண்ணிக்கை 83 ஆக இருந்தது, அதேசமயம் 2024 ஆம் ஆண்டில் இது 75 வழக்குகளாகும். இதனால், 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் 8 வழக்குகள் (10%) குறைந்துள்ளன.

இதேபோல், 2023 ஆம் ஆண்டில் பதிவான கூட்டுக்கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 133 ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 110 வழக்குகளாகவும் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் பதிவான கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 2212 ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 1839 வழக்குகளாகவும் உள்ளது. இதனால், 2023 உடன் ஒப்பிடும்போது 2024 இல் கூட்டுக்கொள்ளை மற்றும் கொள்ளை வழக்குகள் இரண்டிலும் குறிப்பிடத்தக்க அளவு (இரண்டிலும் 17% குறைவு) குறைந்துள்ளது. 

இதேபோல், 2023 ஆம் ஆண்டை (17788) ஒப்பிடும்போது 2024 இல் திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை (15892 வழக்குகள்) குறிப்பிடத்தக்க அளவு (10.65%) குறைந்துள்ளது.

சொத்து தொடர்பான குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைப்பு

தமிழ்நாட்டில் சொத்து தொடர்பான குற்றங்கள் குறிப்பாக ஆதாயக்கொலை, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற கடுமையான குற்றங்கள் 2024 ஆம் ஆண்டில் குறைந்துள்ளன. இதற்கு காவல்துறை மேற்கொண்ட பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகும்.

  1. DACO (சொத்து தொடர்பான குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை) எனப்படுவது   கைரேகைகள், புகைப்படங்கள் மற்றும் குற்றவாளிகளின் செயல்பாடுகள் போன்ற முக்கியமான தகவல்களைப் பகிர்வதில் ஒருங்கிணைப்பை உறுதி செய்தல் மற்றும் செயல்முறை குற்றவாளிகளைக் (MO) கண்காணிப்பதற்கான ஒரு முறையான அணுகுமுறை ஆகும்.

  2. வார இறுதி நாள்கள், பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாள்களில் தீவிர நடவடிக்கைகள். ​​குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தீவிர வாகன சோதனைகள், முந்தைய குற்றவாளிகளைச் சோதித்தல், நிலுவையில் உள்ள பிடிவாரண்டுகளை நிறைவேற்றுதல் மற்றும் தலைமறைவான குற்றவாளிகளைக் கண்டறிதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

  3. வழக்கமான செயல்முறை குற்றவாளிகளைக் (MO) திருட்டுகளைத் தடுக்க அமாவாசை இரவு நேரங்களில் தீவிர இரவு ரோந்து.

  4. கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான குற்ற வழக்குகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் குற்றப்பகுதிகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப ரோந்து பணியினை தீவிரப்படுத்துதல்.

  5. புதிய இடங்களில் சிசிடிவி பொருத்துவதன் மூலம் சிசிடிவி கண்காணிப்பை விரிவுபடுத்துதல்.

  6. முந்தைய குற்றவாளிகளைக் கண்காணிக்க FRS (முக அங்கீகார அமைப்பு) செயலி மற்றும் ஸ்மார்ட் காவலார் செயலியை திறம்பட பயன்படுத்துதல்.

2) சட்டம் & ஒழுங்கு

2023 ஆம் ஆண்டில் உடலுக்கு எதிரான குற்றங்களில் (கொலை, கொலை முயற்சி, கொலை கொலையாத மரணம், காயம் மற்றும் கொங்காயம்) 49,286 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் 2024 ஆம் ஆண்டில் இது 31,497 ஆகும். இதனால் 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் 17,789 வழக்குகள் (36.12%) குறைந்துள்ளன. குறிப்பாக, 2023 உடன் ஒப்பிடும்போது 2024 இல் கொலைகள் 110 வழக்குகள் (6.8% குறைப்பு). குறைந்துள்ளன

2023 ஆம் ஆண்டில் பதிவான கலவர வழக்குகளின் எண்ணிக்கை 1305 ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 1229 வழக்குகளாகவும் உள்ளது. இதனால், 2023 உடன் ஒப்பிடும்போது 2024 இல் 76 வழக்குகள் (5.8%) குறைந்துள்ளன.

மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கலவர வழக்குகள் குறிப்பிடத்தக்க அளவு குறைப்பு

மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ரவுடிகளை திறம்பட கட்டுப்படுத்தியது ஆகியவற்றால் மனித உடலுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக கொலை, காயம் மற்றும் கலவரங்கள் போன்ற கடுமையான வழக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.

1. வார இறுதி நாள்கள், பண்டிகை காலங்கள் மற்றும் நீண்ட விடுமுறை நாள்களில் வாகனச் சோதனைகள் மற்றும் சரித்திர குற்ற ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளை சோதித்தல் மற்றும் கண்டு உணர் காவல்பணி ஆகியவற்றை மையமாகக் கொண்டு தீவிர சிறப்பு நடவடிக்கைகள்.

2. ரவுடி செயல்பாடு முறையாகக் கட்டுப்படுத்துதல் – வழக்கு விசாரணை, மற்றும் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட தொடர்ச்சியான காவல் நடவடிகைகள் மூலம் மாநிலத்தில் ரவுடி செயல்பாடுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

  • காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட ரெளடிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பணிக்கு DARE (ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை) காவல் அலுவலர்களை நியமித்தல்.

  • ரெளடி செயல்பாடுகளை கட்டுப்படுத்த 550 தீவிர செயல்பாடுடைய ரவுடிகள் அடையாளம் காணப்பட்டனர்.

  • விசாரணை முடிவுறும் நிலையில் உள்ள வழக்குகளில் மற்றும் தண்டனை பெற வாய்ப்புள்ள வழக்குகளாக, கடந்த 2023-ம் ஆண்டில் 48 வழக்குகளும், 2024-ம் ஆண்டில் 391 வழக்குகளும் கண்டறியப்பட்டன. இந்த வழக்குகள் மூத்த அதிகாரிகளால் தண்டனை பெறுவதற்காக விசாரணையை விரைவுபடுத்த கண்காணிக்கப்படுகிறது. இவற்றில் 2023-ம் ஆண்டில் 181 ரவுடிகளுக்கு ஏதிராகவும், 2024-ம் ஆண்டில் 242 ரவுடிகளுக்கு ஏதிராகவும் தண்டனை பெறப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சரித்திர பதிவேடு ரெளடிகளுக்கு எதிராக 2023-ல் 85 ரெளடிகளுக்கு ஏதிராகவும், 2024-ல் 150 ரெளடிகளுக்கு ஏதிராகவும் 10 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

  • பிணை நிபந்தனைகள் மீறப்படும்போது ரெளடிகள் பிணையை ரத்து செய்தல், அவர்கள் மேலும் ரெளடி செயல்படுகளில் ஈடுபடுவதைத் தடுத்தல். இவ்வாறாக பிணை நிபந்தனைகளை மீறிய ரெளடிகளுக்கு எதிராக 2023-ம் ஆண்டில் 18, 2024-ம் ஆண்டில் 68 பிணை ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • ரெளடிகள் தலைமறைவாகி, அவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் நிலுவையில் இருந்தால், வாரண்டில் உள்ள ஜாமீன்தாரர்கள் மீது நடவடிக்கை எடுத்தல். கடந்த 2023-ம் ஆண்டில் 1, 2024-ம் ஆண்டில் 21 ஜாமீன்தாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • மேலும் ரெளடி கும்பல்கள்/ போட்டி கும்பல்கள் இடையே கொலைகளைத் தடுக்க, முந்தைய பழிவாங்கும் மற்றும் பகைமை கொண்ட கும்பல்கள் மற்றும் போட்டி கும்பல்களின் பட்டியல் தயார் செய்து தீவிரமாக கண்காணித்தல். கடந்த 2023-ம் ஆண்டில் 110 கொலை வழக்குகளும் 2024-ம் ஆண்டில் 63 வழக்குகளும் பதிவாகின, இது 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024-ம் ஆண்டில் 47 வழக்குகள்    (42.72 %) குறைந்துள்ளன. 

  • தடுப்புக்காவல் – குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் 3694 சமூக விரோதிகளும், 2024 ஆம் ஆண்டில் 4572 சமூக விரோதிகளும் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

  • கொலைகள், உடலுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ரெளடி தொடர்பான வன்முறைகளை தடுப்பதற்காக முறையான, தரவுகளின் அடிப்படையிலான மற்றும் பல்துறை அணுகுமுறை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு காவல்துறையின் இத்தகைய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக, 2024 ஆம் ஆண்டில் சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன, குறிப்பாக கொலை மற்றும் ஆதாயக் கொலை ஆகியவை குறைந்துள்ளன. இது சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், மாநிலத்தில் அமைதியை உறுதி செய்வதிலும் முக்கிய பங்காற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்

திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் நடந்... மேலும் பார்க்க

மக்காச்சோள வர்த்தகத்துக்கு 1% சந்தைக்கட்டணம் விலக்கு!

தமிழ்நாட்டில் மக்காச்சோள வர்த்தகம் மேற்கொள்ள தற்போதுள்ள ஒரு சதவீத சந்தைக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.இது குறித்து தமிழக அரசின் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் வெ... மேலும் பார்க்க

கை ரிக்‌ஷாவைப்போல சாதியும் ஒழிக்கப்பட வேண்டும்: நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவுகள் வெறும் காகிதளவில் மட்டுமே இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து அந்த சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்... மேலும் பார்க்க

அமித் ஷா வருகை: 2 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி ராணிப்பேட்டையில் இன்றும்(மார்ச். 6) நாளையும்(மார்ச். 7) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கபட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) உருவாக்கப்பட... மேலும் பார்க்க

தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் உருவாக்கம்!

தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் (மரகத பூஞ்சோலைகள்) உருவாக்கப்படவுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:வனத்துறை அமைச்சரால் 100 மரகதப்பூஞ்சோலைகள் (கிராம மரப்பூங்காக்கள்)... மேலும் பார்க்க

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா!

திருச்சி: புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா வெகு வி... மேலும் பார்க்க