`பிள்ளைய கட்டுவிரியன் கடிச்சதே தெரியல; கடவுள் போல அரசு மருத்துவர்கள் மீட்டாங்க!'...
2026ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்? - பாபா வங்காவின் கணிப்பு!
பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பல்கேரிய கணிப்பாளர் பாபா வங்காவின் கணிப்புகள் இன்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
2025ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் பலவும், உலகளவில் பேசுபொருளானது. தற்போது பாபா வங்காவின் தங்க விலை கணிப்புகள் கவனத்தை ஈர்த்துள்ளன.

சமீபத்தில் தங்கத்தின் விலை ஒரு புதிய உச்சியை தொட்டதைத் தொடர்ந்து, எதிர்கால வருடத்தின் நிலை குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூபாய் 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலை முதலீட்டு மற்றும் நுகர்வோர் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பாபா வங்காவின் கணிப்புகள் படி, 2026ஆம் ஆண்டு பெரிய அளவில் உலக பொருளாதார அதிர்வுகள் ஏற்படும் என்றும், அதனால் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
வணிக மோதல்கள், பணவீக்கம், சர்வதேச பொருளாதாரம் போன்றவை தங்கத்தின் மதிப்பை உயர்த்தும் முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

2026 கணிப்பு
பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்களில், “cash-crush” எனப்படும் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த கால நிதி நெருக்கடிகளின் போது தங்க விலை 20%–50% வரை அதிகரித்த பதிவுகள் உள்ளன. இதனடிப்படையில், 2026இல் தங்க விலை மேலும் 25% முதல் 40% வரை உயரும் வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதனால் தங்கம் 10 கிராமுக்கு ரூபாய் 1,62,500 முதல் ரூபாய் 1,82,000 வரை செல்லக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
2026இல் தங்கத்தின் விலை கணிக்கப்பட்டபடி மிகப் பெரிய உயர்வைச் சந்திக்குமா என்பதைப் பொறுத்திருக்கவேண்டும்!

















