செய்திகள் :

``மூக்குத்தி, காதணி, மாங்கல்யம் தவிர வேறு தங்க நகைகள் வேண்டாம்'' - கிராமத்தினர் அதிரடி முடிவு; ஏன்?

post image

உத்தரகண்ட் மாநிலம் ஜான்சர்-பவார் பழங்குடிப் பகுதியில் உள்ள கந்தர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஒரு புதிய கட்டுப்பாட்டை தங்களுக்குள் விதித்துள்ளனர். அதாவது திருமணங்கள், குடும்ப விழாக்களின்போது திருமணம் ஆன பெண்கள் அணியும் தங்க நகைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதியாக ஒரு விதியை அவர்கள் வகுத்துள்ளனர்.

அதிகரித்து வரும் செலவினங்களையும் ஆடம்பர கலாச்சாரத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இதனை முன்னெடுத்து இருக்கின்றனர்.

கிராமத்தின் சார்பாக சமூக கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Gold

கனமான ஆடம்பர நகைகளை அணிவதால் அல்லது காட்சிப்படுத்துவதால் ஏழை குடும்பங்கள் மீது ஒரு விதமான நிதி சுமை ஏற்படுவதாகவும், இதனை குறைக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிராமத்தின் சுய கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த முடிவின் படி, திருமணம் ஆன பெண்கள் மூன்று குறிப்பிட்ட தக்க தங்க நகைகளை மட்டுமே அணிய அனுமதிக்கப்படுகிறார்கள். மூக்குத்தி (‘ஃபூலி’), காதணிகள் (‘பண்டே’) மற்றும் மாங்கல்யம் (‘மங்கல்சூத்ரா’) ஆகியவை ஆகும்.

தங்கத்தின் விலை உயர்வால் ஏழை குடும்பங்கள் தொடர்ச்சியாக கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுவதால், பெரும்பாலான குடும்பங்கள் கடனில் தத்தளிப்பதை தவிர்க்கவும், அவர்களின் சேமிப்பை அதிகப்படுத்தவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

``போனில் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கண்காணிக்கப்படும்'' - பாஜக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

மகாராஷ்டிராவில் அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தங்களைத் தயாராகிக்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே கட்சி தொ... மேலும் பார்க்க

2026ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்? - பாபா வங்காவின் கணிப்பு!

பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பல்கேரிய கணிப்பாளர் பாபா வங்காவின் கணிப்புகள் இன்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.2025ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் பலவும், உலகளவில் பேசுபொருளானது. தற... மேலும் பார்க்க

நேரு ஸ்டேடியம் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சத்தை வழங்கிய டேனி ஷெல்டர்ஸ் & சேயோன் சாரிட்டபிள் டிரஸ்ட்

நேரு ஸ்டேடியம் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சத்தை வழங்கிய டேனி ஷெல்டர்ஸ் மற்றும் சேயோன் சாரிட்டபிள் டிரஸ்ட்சமூக நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டில் தனது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், டேனி ஷெல்... மேலும் பார்க்க

அப்போலோ: தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் சிகிச்சை

சென்னை அப்போலோ மருத்துவமனை, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது!சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை ... மேலும் பார்க்க

எவரெஸ்ட் 'Death Zone'-ல் தவித்த ஆஸ்திரேலியப் பெண் - உடல் சொல்வதை அலட்சியப்படுத்தாதீர்!

இலக்கு முக்கியமா? உயிர் முக்கியமா? எவரெஸ்ட் சிகரம் ஒவ்வொரு ஆண்டும் கேட்கும் கேள்வி இதுதான்! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி பியான்கா அட்லர் (Bianca Adler), இந்த ஆண்டு மே மாதம் அந்தப் பரீட்சைய... மேலும் பார்க்க