செய்திகள் :

"தகுதிக்கும் திறமைக்கும் எந்தப் படிநிலையும் இல்லை" - கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய பா.ரஞ்சித்

post image

பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் கபடி பிரிவில் இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி நாட்டுக்குத் தங்கப் பதக்கம் வென்றிருக்கின்றனர்.

தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த தமிழக வீராங்கனையான சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவுக்கு பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், கார்த்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழக அரசு அவருக்கு பரிசுத்தொகை அறிவிக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

கண்ணகி நகர் கார்த்திகா
கண்ணகி நகர் கார்த்திகா

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பா. ரஞ்சித், ``பஹ்ரைனில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இதில் குறிப்பாக, தமிழகத்திலிருந்து சென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த, ‘கண்ணகி நகரைச் சேர்ந்த’ வீர மகள் கார்த்திகாவிற்கு வாழ்த்துகள்.

கண்ணகி நகர் என்றாலே ஒருவித ஒவ்வாமையுடன் பார்க்கும் சிங்காரச் சென்னையில், இன்றைக்கு ‘கண்ணகி நகர்’ என்கிற பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை எனும் அளவிற்கு இந்த வெற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகுதிக்கும் திறமைக்கும் எந்த வரையறையோ படிநிலையோ இல்லை என்பதையும் கார்த்திகா மெய்ப்பித்துள்ளார்.

பொதுவாக, இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழக அரசுப் பரிசுப் பொருட்களையும் அரசுப் பணியையும் வழங்கி கௌரவிப்படுத்திவருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பஹ்ரைனில் வெற்றி பெற்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற ஹரியானவைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு தலா 3 கோடி ரூபாய் வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

முன்னதாக, சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த தமிழக அரசு, கபடி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக அயராது உழைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கும் ஏனைய தமிழக வீராங்கனைகளுக்கும் அரசுப் பணியோடு கூடிய பரிசுத்தொகையை வழங்க முன்வர வேண்டும்.

மேலும், கண்ணகி நகரிலேயே அதிநவீன கட்டமைப்பு வசதி கொண்ட, சிறந்த கபடி மைதானத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

கபடி வீரர், வீராங்கனைகளின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடையில் கொதித்த அமீர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'.இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.... மேலும் பார்க்க

Bison: ``ஒரு படத்துக்காக இவ்வளவு மெனக்கெடுறார்னு எமோஷ்னலா இருக்கும்" - எமோஷ்னலான துருவ் விக்ரம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'.இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.... மேலும் பார்க்க

Bison: ``இதுதான் நடந்தது; எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது"- அமீருக்கு பதில் சொன்ன நடிகர் பசுபதி!

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'.இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.... மேலும் பார்க்க

Bison: ``இசை ஒருவரை மேன்மைப்படுத்துவதற்காக மட்டுமே" - இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'.இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.... மேலும் பார்க்க

Exclusive: சர்வதேச அங்கீகாரம் பெற்ற 'மயிலா'; நடிகை டூ இயக்குநர் - செம்மலர் அன்னம் பேட்டி

அம்மணி, மகளிர் மட்டும், பொன்மகள் வந்தாள், சில்லுக் கருப்பட்டி, வலிமை, கள்வன், ஆயிரம் பொற்காசுகள், குரங்கு பொம்மை, யாத்திசை, மாவீரன், அயலான், அந்தகன் எனத் தொடர்ந்து தன் யதார்த்தமான நடிப்பால் ரசிக்கர்கள... மேலும் பார்க்க