Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
Bison: ``ஒரு படத்துக்காக இவ்வளவு மெனக்கெடுறார்னு எமோஷ்னலா இருக்கும்" - எமோஷ்னலான துருவ் விக்ரம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'.
இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் பைசன் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பைசன் படத்தின் கதாநாயகன் துருவ் விக்ரம், ``கொஞ்சம் பதட்டமா இருக்கு. இந்தப் படத்துக்கு ஆதரவு கொடுத்த ஊடக நண்பர்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றி.
நம்ம படத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கீங்க. இந்தப் படத்துக்காக உழைத்த எல்லாரும் பெரும் உழைப்பை போட்டிருக்காங்க.
இந்த படத்துல சண்டை காட்சிகள்ள நிறைய ஃபைட்டர்ஸ் உண்மையா அடி வாங்கினாங்க. எல்லாமே படத்துக்கு ஏற்றதுபோல ரொம்ப இயல்பா இருந்துச்சு.
பசுபதி சார் நான் முதல் நாள் ஸ்பாட்ல பாக்கும்போது ஏர் உழும் சீன் தான் எடுத்தாங்க. நேர்ல அவரைப் பார்க்கும்போது பெரிய பிரம்மிப்பா இருந்துச்சு.
ஆனா அவர் என்னை ரொம்ப கம்ஃபர்ட்டா பார்த்துகிட்டார். நிறைய கற்றுக்கொடுத்தார். நான் முன்னாடி சொன்ன மாதிரி நீங்க ஒரு பெரிய லெஜன்ட். இந்த படத்துல நீங்க எங்க அப்பாவா நடிச்சதுக்கு ரொம்ப நன்றி சார்.
ரஞ்சித் சார், நீங்க என்னை எப்படி நம்புனிங்கனு தெரியல. ஆனால் எனக்காக இந்த மாதிரி ஒரு படம் கொடுத்திருக்கீங்க. உங்களுடைய நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி.
அமீர் சார் நான் படம் பார்த்ததுக்கு அப்புறம் உங்களோட கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு சார். எனக்கு நீங்க பெரிய இன்ஸ்பிரேஷன்.

சர்வதேச கபடி போட்டில தங்கம் வென்ற கன்னகி நகர் கார்த்திகாவுக்கு வாழ்த்துக்கள். என் வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு வெற்றியை நான் உணர்ந்தது இல்ல.
இந்த வயசுல, பைசன் மாதிரி ஒரு படம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. இந்தப் படம் மூலம், சினிமாவுக்காக என்னவெல்லாம் செய்யத் தயாராக இருக்கணும், கடுமையான உழைப்பை போடனும்னு கத்துகிட்டேன்.
என்னோட 27 வருட வாழ்க்கையில நான் கத்துக்கிட்ட விஷயங்கள விட, இந்தப் படத்துக்காக செலவழித்த ஒன்றரை வருசம் எனக்குப் பெரியப் பாடம். அதுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.
நாங்க எல்லோரும் ரெஸ்ட்ல இருக்கும்போது மாரி செல்வராஜ் சார் கபடி விளையாடுற இடத்துல சுத்தி ஓடிட்டே இருப்பார். பயிற்சி செஞ்சிட்டே இருப்பார்.
அதெல்லாம் பார்க்கும்போது ஒரு படத்துக்காக இவ்வளவு மெனக்கெடுறார்னு எமோஷ்னலா இருக்கும். இந்த படத்துல நீங்க பார்க்கிற ஒவ்வொரு கபடி காட்சியிலும் நான் பண்றது எல்லாம் வந்து அவர் ரொம்ப ரிஸ்க் எடுத்து பண்ணது.
அவருக்கு கைகூட உடைந்தது. இதெல்லாம் நம்மளோட சினிமாக்காகவும், எனக்காகவும் பண்ணாருன்னு நான் நம்புகிறேன்." என்றார்.














