செய்திகள் :

Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடையில் கொதித்த அமீர்

post image

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'.

இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் பைசன் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர்.

மாரி செல்வராஜ் - ரஞ்சித் - துருவ்: பைசன் வெற்றிவிழா
மாரி செல்வராஜ் - ரஞ்சித் - துருவ்: பைசன் வெற்றிவிழா

இந்த நிகழ்வில் உரையாற்றிய இயக்குநரும், நடிகருமான அமீர், ``என்னுடைய திரை பயணத்தில கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் ஆயிடுச்சு.

மௌனம் பேசியது தொடங்கி இந்த நிமிடம் வரைக்கும் என்னுடைய திரைப்படங்களுக்கு வெற்றி விழா நடந்தது இல்ல.

திரைக்கு கொண்டுவர வரைக்கும் அந்தப் படத்துக்கு பின்னாடி ஓடிட்டே இருப்பேன். ஆனால் படம் வெளியானதும், பருத்தி வீரன் வெற்றியும் சரி, வணிகரீதியாக தோல்வியானாலும் சரி நான் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டேன்.

அதுக்கு நிறைய காரணம் இருக்கு. அதை இப்போ சொல்ல விரும்பல. ஆனால் இந்த திரைப்படத்திற்காக முதல்முறையாக மூணு இடத்துக்கு வெளியில போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்தப் படத்துக்காக மாரி செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தபோதெல்லாம் ஒரேமாதிரியான கேள்விகள் வந்துகிட்டே இருந்தது.

'நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? நீங்க சமூகத்துக்குள்ள ஒரு பிரச்சனை உண்டு பண்ண நினைக்கிறீங்களா?". இந்தக் கேள்வி எவ்வளவு அபத்தமான கேள்வி...

மாரி செல்வராஜ் - ரஞ்சித் - துருவ்: பைசன் வெற்றிவிழா
மாரி செல்வராஜ் - ரஞ்சித் - துருவ்: பைசன் வெற்றிவிழா

கண்ணுக்குத் தெரியாத சாமி, இல்லாத பேய் படங்களை எடுக்கும்போது, கண்ணுக்கு தெரியிற சாதியக் கொடுமையைப் பற்றி, வலியை, துன்பத்தைப் பேசுறதுனு தப்புனு எப்படி கேள்வி கேக்குறீங்க...

பொதுவெளியில் அரசியல் சார்ந்தவங்க கருத்து தெரிவிக்கிறாங்கனா அது அவங்களோட அரசியல் நிலைபாடு. ஒரு படம் எடுக்கப்படுகிறது.

அதற்கான எதிர் கருத்து இருந்தா அதை முன்வச்சி பேசுங்க. மிகப்பெரிய வெற்றிகள் கொடுத்த எல்லா இயக்குனர்களுக்கும் அந்தப் படத்துக்கான நடிகர்களை அந்தப் படம்தான் தேர்வு செய்யும். அப்படிதான் பைசன்.

அப்பாவா பசுபதியை தவிர வேறு யாரையும் அந்த இடத்துல வச்சி பார்க்க முடியாது. எழில் இல்லன்னா யாரு சிறப்பா கேமரா பண்ணிருப்பான்னு யோசிக்கிறேன்.

இந்த படத்தை பார்த்ததுக்கு பின்னாடி எனக்கு ஒரு மூணு பேரோட ஒர்க் பண்ணனும் ஆசை வந்துருச்சு.

90% மாபெரும் வரவேற்பு. மக்களிடத்தில் இந்தப் படத்தைக் கொண்டு போய் சேர்த்து மாபெரும் வெற்றியை கொடுத்த ஊடக நண்பர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் என்னுடைய நன்றி." என்றார்.

Bison: ``ஒரு படத்துக்காக இவ்வளவு மெனக்கெடுறார்னு எமோஷ்னலா இருக்கும்" - எமோஷ்னலான துருவ் விக்ரம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'.இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.... மேலும் பார்க்க

Bison: ``இதுதான் நடந்தது; எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது"- அமீருக்கு பதில் சொன்ன நடிகர் பசுபதி!

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'.இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.... மேலும் பார்க்க

Bison: ``இசை ஒருவரை மேன்மைப்படுத்துவதற்காக மட்டுமே" - இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'.இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.... மேலும் பார்க்க

"தகுதிக்கும் திறமைக்கும் எந்தப் படிநிலையும் இல்லை" - கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய பா.ரஞ்சித்

பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் கபடி பிரிவில் இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி நாட்டுக்குத் தங்கப் பதக்கம் வென்றிருக்கின்றனர்.தங்கப் பதக்கம் வ... மேலும் பார்க்க

Exclusive: சர்வதேச அங்கீகாரம் பெற்ற 'மயிலா'; நடிகை டூ இயக்குநர் - செம்மலர் அன்னம் பேட்டி

அம்மணி, மகளிர் மட்டும், பொன்மகள் வந்தாள், சில்லுக் கருப்பட்டி, வலிமை, கள்வன், ஆயிரம் பொற்காசுகள், குரங்கு பொம்மை, யாத்திசை, மாவீரன், அயலான், அந்தகன் எனத் தொடர்ந்து தன் யதார்த்தமான நடிப்பால் ரசிக்கர்கள... மேலும் பார்க்க