Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
சோனியா ராமன்: `சியாட்டில் ஸ்டார்ம்ஸ்' அணியின் ஹெட் கோச் - WNBA வரலாற்றில் முதல் இந்திய வம்சாவளி!
தடைகளை உடைத்தெறிந்த சோனியா ராமன், WNBA (Women’s National Basketball Association)-ன் புகழ்பெற்ற சியாட்டில் ஸ்டார்ம்ஸ் (Seattle Storm) அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம், WNBA வரலாற்றில் இந்த உயர்ந்த தலைமைப் பதவியை அலங்கரிக்கும் முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையை பெற்றிருக்கிறார்,
சியாட்டில் ஸ்டார்ம்ஸ் அணியானது, கடந்த மாதம் நடந்த பிளேஆஃப் சுற்றின் முதல் சுற்றிலேயே லாஸ் வேகாஸ் ஏசஸ் அணியிடம் தோற்று வெளியேறியதைத் தொடர்ந்து, முன்னாள் பயிற்சியாளர் நோயல் க்வின் (Noelle Quinn) நீக்கப்பட்டார். அணியின் நிர்வாகம், ஒரு புதிய கண்ணோட்டத்தையும், மறுசீரமைப்புத் திட்டத்தையும் கொண்டு வரக்கூடிய ஒரு தலைவருக்காகத் தீவிரமாகத் தேடியது. இந்தச் சூழலில், சோனியா ராமனின் நியமனம், அணியின் எதிர்காலத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு துணிச்சலான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகக் கருதப்படுகிறது.

சோனியா ராமன் அமெரிக்காவில் பிறந்திருந்தாலும், அவரது குடும்பம் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தது. கூடைப்பந்தின் மீது சிறு வயதிலிருந்தே இருந்த ஆழ்ந்த ஆர்வமே அவரை இந்தப் பாதைக்கு இட்டுச் சென்றது. அவர் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் (Tufts University) இளங்கலைப் பட்டம் பெற்றதுடன், பாஸ்டன் கல்லூரி சட்டப் பள்ளியில் (Boston College Law School) சட்டப் பட்டமும் பெற்றவர்.
சட்ட அறிவும், சிக்கல்களைப் பகுப்பாய்வு செய்யும் திறனும் கொண்டிருப்பதால், அவர் உருவாக்கும் அணி திட்டமிடல், நுணுக்கம் மற்றும் ஒழுங்குடன் செயல்படுகின்றன என்கிறார்கள் அணி நிர்வாகத்தினர்.அவர் உருவாக்கும் அணிகள் பெரும்பாலும் வெற்றியை நோக்கித் துல்லியமாக நகரும் ஆற்றல் கொண்டவையாக உள்ளன.
அவர் தனது பயிற்சியாளர் வாழ்க்கையை மாஸாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகமான MIT மகளிர் கூடைப்பந்து அணியில் தொடங்கினார். அங்கு 12 ஆண்டுகாலம் தலைமைப் பயிற்சியாளராக இருந்த அவர், அந்தத் திட்டத்தின் வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்தார். அதன்பின், அவர் NBA-ல் இடம்பெற்ற மெம்பிஸ் கிரிஸ்லீஸ் (Memphis Grizzlies) அணியின் உதவி பயிற்சியாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.

முதல் இந்திய-அமெரிக்கப் பெண் NBA உதவிப் பயிற்சியாளர் என்ற பெருமையையும் அப்போது பெற்றார். பின்னர், WNBA-ல் நியூயார்க் லிபர்டி (New York Liberty) அணியில் முக்கியப் பங்களிப்பை வழங்கிய இவரது அனுபவம், சியாட்டில் ஸ்டார்ம்ஸின் தலைமைப் பொறுப்புக்கு இவரை உயர்த்தியுள்ளது.
இப்போது, சியாட்டில் ஸ்டார்ம் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள சோனியா ராமன், ஒரு கட்டமைப்புக் காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அணியின் முக்கியமான நட்சத்திர வீராங்கனைகள் சிலர் ஃப்ரீ ஏஜென்ட்களாக மாறவிருப்பதால், அணியின் மறுசீரமைப்பிற்கு இவருக்குப் பெரும் பொறுப்பு உள்ளது. அவரது அனுபவமும் திட்டமிடும் திறனும் இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்யும் என்று அணி நிர்வாகம் நம்புகிறது.!

















