செய்திகள் :

RoKo: 'மீண்டும் ஆட வருவோமா என தெரியாது!' - உருகும் ரோஹித் - கோலி

post image

சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. ரோஹித் சர்மா சதத்தையும் கோலி அரைசதத்தையும் அடித்து போட்டியை வென்று கொடுத்திருந்தனர். இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு இருவரும் கூட்டாக பேட்டி அளித்திருந்தனர்.

ரோஹித் -கோலி
ரோஹித் - கோலி

அதில் ரோஹித் பேசுகையில், 'ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் ஆட வருவது எப்போதுமே பிடிக்கும். குறிப்பாக இந்த சிட்னி மைதானம் பல பழைய நினைவுகளை கிளறிவிட்டது. 2008 லேயே இங்கே ஆடியிருக்கிறேன். நாங்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு வருவோமா என தெரியாது. ஆனால், இங்கு ஆடிய ஒவ்வொரு தருணத்திலும் மகிழ்ந்திருக்கிறேன்.

எது நடந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் கிரிக்கெட் ஆடுவதை மட்டுமே விரும்பியிருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் ஆடுவதை எப்போதும் விரும்பியிருக்கிறேன். தேங்க்யூ ஆஸ்திரேலியா!' என்றார்.

கோலி - ரோஹித்
கோலி - ரோஹித்

கோலி பேசுகையில், 'நீங்கள் எவ்வளவு காலம் கிரிக்கெட் ஆடியிருந்தாலும், இந்த ஆட்டம் உங்களுக்கு பல புதிய வழிகளை காட்டிக் கொண்டேதான் இருக்கும். இன்னும் சில நாட்களில் எனக்கு 37 வயதாகிவிடும். சேஸிங்தான் எப்போதுமே எனக்குள் இருக்கும் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர்கிறது என நினைக்கிறேன்.

ரோஹித் - கோலி
ரோஹித் - கோலி

ரோஹித்துடன் மேட்ச் வின்னிங் பார்ட்னர்ஷிப்பை அமைத்ததில் மகிழ்ச்சி. இப்போதைக்கு நாங்கள்தான் ரொம்பவே அனுபவமிக்க இணை என நினைக்கிறேன். நாங்கள் இளைஞர்களாக இருந்த போதே ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் போட்டியை வென்று கொடுக்கும் என்பதை உணர்ந்திருந்தோம்.

2013 இல் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு வந்திருந்தார்கள். அந்தத் தொடரிலிருந்தே எங்கள் இருவருக்கும் அந்த புரிதல் உண்டானதென நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு வருவது எப்போதுமே பிடிக்கும். இங்கே சிறப்பான ஆட்டங்களை ஆடியிருக்கிறோம். எப்போதுமே எங்களுக்கு ஆதரவளிக்க பெருந்திரளாக திரண்டு வருவார்கள். அதற்கு நன்றி.' என்றார்.

'சீனியர்கள் எனக்கு செய்ததை இளம் வீரர்களுக்கு நான் செய்யப்போகிறேன்!' - ரோஹித் மகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த மூன்றாவது ஓடிஐ போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அணியின் சூப்பர் சீனியர் வீரரான ரோஹித் சதமடித்து அசத்தியிருந்தார். அவருக்... மேலும் பார்க்க

சோனியா ராமன்: `சியாட்டில் ஸ்டார்ம்ஸ்' அணியின் ஹெட் கோச் - WNBA வரலாற்றில் முதல் இந்திய வம்சாவளி!

தடைகளை உடைத்தெறிந்த சோனியா ராமன், WNBA (Women’s National Basketball Association)-ன் புகழ்பெற்ற சியாட்டில் ஸ்டார்ம்ஸ் (Seattle Storm) அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிய... மேலும் பார்க்க

RoKo : 'ரோஹித்தின் கிடாக்கறி விருந்து; கோலியின் கம்பேக்! - அதிர்ந்த சிட்னி!

'RoKo வுக்கான சவால்!'பெரும் அனுபவமுள்ள இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்த இரண்டு வீரர்களுக்கு முன்பாக, கிட்டத்தட்ட இதுதான் உங்களின் கடைசி வாய்ப்பு என்பதைப் போல ஒரு போட்டியைக் கொடுத்தால் அவர்கள் எப்படி ... மேலும் பார்க்க

Dhoni : '38 வயசுல மேன் ஆப் தி சீரிஸ்...' - தோனியின் அந்த ஆஸ்திரேலிய ருத்ரதாண்டவம் நியாபகமிருக்கிறதா?

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோற்றிருக்கிறது. தொடரை இழந்திருக்கிறது. அதைவிட மிக முக்கியமாக ... மேலும் பார்க்க

Rohit Sharma : திணறடித்த ஹேசல்வுட்; தடுமாறி மீண்ட ரோஹித்; தவறிப்போன சதம்!

அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஓடிஐ போட்டியில் இந்திய அணி ஆடி வருகிறது. அணியின் சீனியர் வீரரான ரோஹித் அரைசதத்தை கடந்து 73 ரன்களில் ஆட்டமிழந்திருக்கிறார். கடந்த போட்டியில் சோபிக்காத ரோஹ... மேலும் பார்க்க

Kohli : 'கோலிக்கு ஆஸ்திரேலியா விரித்த வலை; இரண்டாவது முறையாக எப்படி டக் அவுட் ஆனார்?'

அடிலெய்டில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளிடையேயான இரண்டாவது ஓடிஐ போட்டி நடந்து வருகிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் டக் அவுட் ஆன கோலி, இந்தப் போட்டியிலும் ரன் கணக்கை தொடங்காமல் கோலி டக் அவுட... மேலும் பார்க்க