செய்திகள் :

`விஜய் என்ன சிறு பிள்ளையா?; பழனிசாமி துரோகம் பற்றி தெரியாதா?’ - டி.டி.வி.தினகரன் ஓப்பன் டாக்

post image

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட டி.வி.எஸ் கார்னர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.ம.மு.க சார்பில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.

எதிர்பாராத, கணிக்க முடியாத புதிய கூட்டணிகள் உருவாகும்!

செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன்,

"நெல்மணிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு உரிய முறையில் செயல்பட்டு அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். விவசாயிகளுக்கு தேவையான உரிய நிவாரணத்தை தமிழ்நாடு அரசு பெற்றுத் தர வேண்டும். அதனை ஒன்றிய அரசும் செவிசாய்க்க வேண்டும்.

கஜா புயலின் போது எடப்பாடி பழனிசாமி எப்படி செயல்பட்டார் என்பது அனைவருக்குமே தெரியும். தேர்தல் நேரத்திலாவது தற்போது எடப்பாடி பழனிச்சாமி டெல்டாவுக்கு வந்து சென்றது மகிழ்ச்சிதான். எந்த கூட்டணியும் உடையும் என்று நான் ஜோதிடம் கூறவில்லை. நீங்கள் எதிர்பாராத விதமாக கணிக்க முடியாத அளவிற்கு புதிய கூட்டணிகள் உருவாகும். வரக்கூடிய தேர்தலில் ஆளும் தி.மு.க. கூட்டணிக்கும், த.வெ.க தலைமையில் அமைகின்ற கூட்டணிக்கும் இடையே தான் போட்டியிருக்கும்.

ttv dinakaran

த.வெ.க ஒரு புதிய கட்சி தான்!

த.வெ.க.வில் உள்ளவர்கள் அனைவரும் அரசியலுக்கு புதியவர்கள் விஜய் உட்பட. இதேபோல், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அவைத்தலைவராக இருந்தார். அதுபோல், த.வெ.க கட்சியில் ஆலோசனை சொல்வதற்கு யாரும் இல்லை. அதுவும் கூட காரணமாக இருக்கலாம்.

கரூர் சம்பவத்தால் ஏற்பட்ட கடுமையான துக்கத்திலும் மன வருத்தத்திலும் கூட அவர்கள் அமைதியாக இருக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம். த.வெ.க ஒரு புதிய கட்சி தான். ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி மறைவிற்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தன்னை தலைவராக தி.மு.க-வில் நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி, அந்தக் கட்சியின் பயனை சொல்ல முடியாத அளவிற்கு, அ.தி.மு.க-வே இல்லை என்ற அளவிற்கு, அ.தி.மு.க-வின் அடிப்படை விதிகளையே மாற்றி எடப்பாடி தி.மு.க-வாக மாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரிடம் கொடுக்கப்பட்ட நாலரை ஆண்டு கால ஆட்சியில் தவறான செயல்பாடுகளால் ஆட்சியை இழந்தார்.

விஜய், ரஜினிகாந்தை போல உச்சபட்ச நடிகர்!

அரசியல் ரீதியாக தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று எல்லோரையும் புறம் தள்ளிவிட்டு குருட்டு நம்பிக்கையில் தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டு புரட்சித் தமிழன் என்று பெயர் சூட்டிக்கொண்டு அவர் செயல்படுவது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

விஜய், ரஜினிகாந்தை போல உச்சபட்ச நடிகர். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். 30 ஆண்டுகள் ஒருவர் சினிமாவில் தன்னை சூப்பர் ஸ்டாராக நிலை நிறுத்திக் கொள்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. எப்படி அரசியலோ, அது போன்று சினிமாவும் மிகவும் கடினமான ஒரு துறை தான். அரசியலில் ஒவ்வொரு நாளும் செயல்பாடு இல்லை என்றால் காணாமல் போய்விடுவோம். ஒவ்வொரு தேர்தலிலும் கட்சியோ மனிதர்களோ சோபிக்கவில்லை என்றால் கண்டுகொள்ள மாட்டார்கள். அதுபோல்தான் சினிமாவும். எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர்கள் எல்லாம் காணாமல் போன நிலையில் 50 ஆண்டுகளை தாண்டி ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் எல்லாம் இன்றைக்கும் உச்ச நடிகர்களாக இருக்கின்றனர். அந்த வரிசையில் விஜய், அஜித் அவர்களுக்கு அடுத்த கட்டமாக இருக்கிறார்கள்.

ttv dinakaran

சினிமா உலகத்தில் கடுமையான போட்டிக்கு இடையே தன்னை நிலை நிறுத்திய விஜய் அவர் பெயர் பட்டி தொட்டி எல்லாம் தெரியும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விஜய் என்றால் தெரியும்.. அந்த பிரபலம் அரசியலுக்கு தேவையானது ஊடகமும், கருத்துக்கணிப்பு எடுப்பவர்களும் வரக்கூடிய தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறுகின்றனர். கடந்த 2006-ல் விஜயகாந்த் தாக்கத்தை உருவாக்கியதை விட அதிகமான தாக்கத்தை வருகின்ற தேர்தலில் விஜய் உருவாக்குவார். எடப்பாடி பழனிச்சாமி இரட்டை இலை சின்னம் இருக்கின்ற காரணத்தினாலும், பண பலத்தாலும்தான் சுழல்கிறார். வருகின்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி 15 சதவிகிதத்திற்கும் கீழ் வாக்கு சதவீதத்தை பெறுவார். 2006-ல் விஜயகாந்த் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும் தொங்கு சட்டசபையை உருவாக்கினார். விஜயகாந்த் வருகையால் அப்போதைய காலகட்டத்தில் திமுக 50 தொகுதிகளும், அ.திமுக 70 தொகுதிகளிலும் பாதிக்கப்பட்டது.

அதைவிட அதிகத் தாக்கம் விஜய் ஏற்படுத்துவார். விஜய் இரண்டாவது இடத்திற்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. விஜய்க்கு சரியான கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணிக்கு சரியான போட்டியாக அமையும், பழனிசாமி தலைமையிலான அணி மூன்றாவது இடத்திற்கு தானாக சென்று விடும். எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றால் த.வெ.க கொடியை தூக்கி பிடிக்கலாம். சினிமாவில் விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கும்போது தான் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக கட்சியை ஆரம்பித்துள்ளார். தன் தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று இரண்டு மாநாடுகளிலும் விஜய் கூறியுள்ளார். திரை உலகில் எத்தனையோ சவால்களை சந்தித்தவர் விஜய். எடப்பாடி பழனிசாமியை பற்றி அவருக்கு தெரியாதா?. துரோகத்திற்குப் பெயர் பெற்றவர் எடப்பாடி பழனிசாமியை விஜய் தலைமையிலான கூட்டணியில் பழனிசாமியை சேர்ப்பதற்கு விஜய் யோசிப்பார்.

ttv dinakaran

பழனிசாமி எப்பொழுதும் அமாவாசை வேலையைத்தான் செய்வார். த.வெ.க கட்சித் தொண்டர்கள் விஜயை முதலமைச்சராக ஆக்குவதற்கு தான் விரும்புவார்களே தவிர, துரோகத்திற்கே பெயர் போன பழனிசாமியை ஆதரித்து அவர் தலைமையின் கீழ் விஜய் செல்ல விரும்பமாட்டார்கள்.

இவரை ஆட்சியில் அமர்த்தியவர்கள், ஆட்சி தொடர காரணமாக இருந்தவர்கள், நான்கரை ஆண்டு ஆட்சியை காப்பாற்றியவர்கள், இவர்களுக்கெல்லாம் துரோகம் செய்த பழனிசாமி விஜய்க்கு துரோகம் செய்வார் என்பது விஜய்க்கு தெரியாதா?. அவர் என்ன சிறு பிள்ளையா? உறுதியாக விஜய் பழனிசாமியின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை. பழனிசாமி தான் தன்னால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று உணர்ந்து விஜய் தலைமையை ஏற்று கூட்டணி செல்வதற்கு வேண்டுமென்றால் வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான், முன்னாள் அமைச்சர்கள் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் த.வெ.க-வுக்கு தி.மு.க.வால் ஆபத்து என்று பேசி வருகிறார்கள்.

விஜய் உஷாராக இருந்து.!

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கொடநாடு வழக்கு ஊழல் உள்ளிட்டவற்றிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருக்கையில், புதிதாக திரை உலகை விட்டு அரசியலுக்கு வந்த விஜய்யை, மு.க. ஸ்டாலின் என்ன செய்து விடப் போகிறார்?.

விஜய்யை கூட்டணிக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக இது போன்றவற்றை கூறி சிறுபிள்ளைத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். விஜய் உஷாராக இருந்து, தனது தலைமையை ஏற்று எடப்பாடி பழனிசாமி வந்தால் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அ.ம.மு.க. இடம்பெறக்கூடிய கூட்டணி தான் வெற்றி கூட்டணியாக இருக்கும். அதுதான் ஆட்சி அமைக்கும்.

தேர்தலுக்கு முன் இரட்டை இலை இருக்கிறது, பழனிசாமி இடம் பண பலம் இருக்கிறது என்று நினைத்து தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற நிர்வாகிகள், தொண்டர்கள் விஜய் வருவாரா என்று வழி மேல் விழி வைத்து காத்திருப்பவர்கள், ஒன்று விஜய் தலைமையை ஏற்று செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்கள் பிழைப்பார்கள்.

பழனிசாமியை நம்பியவர்கள் இந்த தேர்தலுக்கு பிறகு உண்மையான அ.தி.மு.க.-வை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். செல்லூர் ராஜுவுக்கு செலக்ட்டிவ் அம்னீசியாவா என்று தெரியவில்லை, எடப்பாடி பழனிசாமி அவரது கட்சியினரையே வைத்து த.வெ.க. கட்சிக் கொடியை பிடிக்க சொன்னவர். பழனிசாமிக்கு விஜய் கூட்டணிக்கு வரப்போவதில்லை என்று தெரியும். அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் சோர்ந்து போய் உள்ளதால் அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களே விஜய் கட்சி கொடியை பிடித்த போது கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டதாக பேசினார்.

அதற்கும் விஜய் பதில் சொல்லிவிட்டால் அதுவும் முடிந்துவிடும். செங்கோட்டையன் பத்து நாட்களுக்குள் முன்னெடுப்பை எடுக்க வேண்டும் என்றுதான் கூறினார். கெடு விதிப்பதாக கூறவில்லை. ஊடகங்கள் தவறாக போட்டுவிட்டனர் என்று செங்கோட்டையன் சொன்னது உண்மைதான்.

கரூர் வழக்கில் நான் நடுநிலையாகத்தான் பேசி வருகிறேன் ஆனால், த.வெ.க.-விற்கு வக்கீல் போல அ.தி.மு.க. தான் வாதாடி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தான் த.வெ.க.-விடம் தொங்கி கொண்டிருக்கிறார். 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தது அரசியல் தவறு.

ttv dinakaran

இதனால், 15 சமுதாய மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரண்டனர். இன்றைய பா.ஜ.க அரசு முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா அறிவித்தாலும் கூட பழனிசாமி செய்த தவறை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? விஜய் பற்றி பேசுவது மிகைப்படுத்துவதா? என்பது வருகின்ற மே மாதம் தேர்தல் முடிவு வரும் பொழுது தெரியும். எது உண்மை என்பது தெரியவரும்.. அ.தி.மு.க ஜெயலலிதா இருந்தவரை பெரிய கட்சி தான். தற்போது அது பெரிய கட்சி எல்லாம் கிடையாது. இரட்டை இலை சின்னம் மட்டுமே அங்கு இருக்கிறது. பெரிய கட்சியாக 10 முறை ஆட்சியில் இருந்து பண பலத்துடன் ஆட்சி அதிகாரத்துடன் இருந்தும் ஆட்சிக்கு வர முடியவில்லை.

பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு போனார்கள். இதைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தால் கன்னித்தீவு கதை போல சென்று கொண்டே தான் இருக்கும். இரண்டு ஆண்டு காலமாக ஓ.பி.எஸ்-ம், நானும் ஒன்றாகத்தான் பயணித்து வருகிறோம். இதுகுறித்து தேர்தல் நேரத்தில் தெரியவரும்." என்று தெரிவித்தார்.

`முதல்வருக்கு களங்கம் ஏற்படக்கூடாதுனு அமைதியா.!' - துரைமுருகன் பேச்சால் செல்வப்பெருந்தகை காட்டம்

வடகிழக்கு பருவமழையால் கடந்த 10 நாள்களாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இதனால் அணைகள், ஏரி போன்ற நீர்நிலைகள் நிரம்பிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் ஆங்காங்கே தி... மேலும் பார்க்க

PMK: `எனக்கு பாதுகாப்பாக இருப்பார்!’ - மகள் காந்திமதியை செயல் தலைவராக அறிவித்த ராமதாஸ்

பா.ம.க-வின் நிறுவனரும், தலைவருமான ராமதஸுக்கும் - அவரின் மகன் அன்புமணிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இருவருக்கும் இடையே பிரச்னை தீவிரம் அடைந்த நிலையில், அன்புமணி தனித்து செயல்படத் தொடங்கினார்.... மேலும் பார்க்க

`பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்த கேரளா; கூட்டணியில் குழப்பம்' - அமைச்சர் தரும் விளக்கம் என்ன?

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்த கேரளாமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையான பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணையாமல் இருந்தன. இதை அடுத்து மத்திய அரசு கல்விக்கான நிதியை நி... மேலும் பார்க்க

மந்திரிகளின் Cold war, ஆக்‌ஷன் ரூட்டில் Stalin?! | Elangovan Explains

நெல் கொள்முதல் விவகாரத்தை ஒட்டி எடப்பாடியின் டெல்டா விசிட்டுக்கு பதிலடியாக, தஞ்சை சென்றுள்ளார் உதயநிதி. இன்னொரு பக்கம், தீவிரக் களப்பணி, வேட்பாளர்கள் தேர்வு, அதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு என தேர்த... மேலும் பார்க்க

``காலக்கெடு, தலையில் துப்பாக்கியுடன் ஒப்பந்தங்கள் செய்ய மாட்டோம்'' - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்த முயன்றுவரும் சூழலில், நம் நாடு அவசர அவசரமாகவோ, அழுத்தத்தின் கீழோ ஒப்பந்தங்களில் கையெழுத்திடாது எனப் பேசியுள்ளார் வர்த்... மேலும் பார்க்க