செய்திகள் :

2026 தேர்தலை நிர்ணயிக்கப் போவது மது ஊழலும், மணல் கொள்ளையும் தான்: தமிழிசை

post image

2026 தேர்தலை நிர்ணயிக்கப் போவது மது ஊழலும், மணல் கொள்ளையும் தான் என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை குமரி ஆனந்தனை பார்ப்பதற்காக வந்திருந்த தமிழிசை சௌந்தரராஜன் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீளமான பட்ஜெட் வெற்று பட்ஜெட் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாத பட்ஜெட். முன்னேற்றத்திற்கான எந்த கவனமும் செலுத்தாமல் சண்டை போடும் நோக்கத்திலேயே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிப்பாதாக குறை சொல்கிறார்கள். பட்ஜெட்டில் டெல்டா மாவட்ட மக்களின் பயனுக்காக எந்த திட்டமும் இல்லை. இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார். பெண் பாதுகாப்பிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா அமைக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிலிண்ட்ருக்கு நூறு ரூபாய் மானியம் கொடுக்கப்படும் என்றார்கள். அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கு எந்த நிதியும் இதுவரை ஒதுக்கவில்லை. மகளிர் உதவி தொகை விண்ணப்பித்தவர்களுக்கு கொடுக்கப்படும் என தமிழக அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே 2500 வழங்கியது. பெண்களின் பயணத்திற்கு இலவச என்பது மட்டும் முன்னேற்றத்திற்கு வழிவகையாக இருக்காது. ஏதோ பெண்களுக்கு கொஞ்சம் இலவசம் கொடுத்தால் வாழ்வாதாரம் மேம்படும் என நினைக்கிறார்கள்.

கல்வித் துறைக்கு தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா?

ஆனால் பெண்கள் மேம்படுவதற்கான திட்டம் எதுவும் இல்லை. பென்ஷன் திட்டம் குறித்து எந்த திட்டமும் இல்லை, மின் கட்டண உயர்வு குறித்து எந்த திட்டமும் இல்லை. எதுவுமே இல்லாத ஒரு பட்ஜெட் இது. 2026 தேர்தலை நிர்ணயிக்கப் போவது மது ஊழலும், மணல் கொள்ளையும் தான். விளம்பர நோக்கில், வெற்று அரசு நடந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த வெற்று நிதி நிலை அறிக்கை உணர்த்தியுள்ளது. இது ஒரு வெற்று பட்ஜெட். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம்: வேளாண் பட்ஜெட்

சென்னை: சென்னையில் பொதுமக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட்: உழவர் பாதுகாப்புத் திட்ட நிதியுதவி உயர்த்தி அறிவிப்பு!

முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி உயர்த்தப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அ... மேலும் பார்க்க

அதிக விளைச்சலை காட்டும் 3 விவசாயிகளுக்கு பரிசுத் தொகை

சென்னை: தமிழகத்தில் வேளாண்மை செய்து அதிக விளைச்சலை காட்டும் 3 விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்க... மேலும் பார்க்க

29 மாவட்டங்களுக்கு சிறப்புத் தொகுப்பு; கோடை உழவுக்கு ரூ.2,000 மானியம்

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் அல்லாத 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகரிக்க சிறப்புத் தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட்: விவசாயிகளுக்கு ரூ. 3.58 லட்சம் கோடி பயிர்க் கடன்!

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.வேளாண் துறையுடன் கால்நடைத் துறை, ... மேலும் பார்க்க

விவசாயிகள் மிடுக்குடன் நடைபோட புதிய திட்டங்கள் : எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

சென்னை: வேளாண் பெருமக்களான விவசாயிகள் மிடுக்குடன் நடைபோடும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.வரும் 2025 - 06ஆம்... மேலும் பார்க்க