வேளாண்மை நிதி நிலை அறிக்கை 2025-2026: முக்கிய புதிய திட்டங்கள்
திருக்குறள், புறநானூறு கூறி உரையைத் தொடங்கினார் பன்னீர்செல்வம்!
தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை நிதிநிலை அறிக்கையை அந்தத் துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றத் தொடங்கினார்.
அப்போது, விவசாயிகளைப் பற்றி புகழ்ந்துரைக்கும் திருக்குறள், புறநானூறு பாடல்களைக் கூறி தனது உரையைத் தொடங்கினார்.
முதலில்,
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர் என்கிறார் திருவள்ளுவர்.
அதாவது, பல்வேறு அரசுகளை, தமது குடை நிழலின் கீழ் கொண்டு வரும் திறமை பெற்றவர்கள் உழவர்கள் என்று திருவள்ளுவர் புகழ்ந்துரைத்துள்ளார்.
உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் அனைத்து மக்களையும் பாதுகாப்பார்கள் என்பது புறநாநூறு கூறும் சொல் என்று கூறி தனது உரையைத் தொடங்கியுள்ளார்.