360 நாட்டுக்கோழிப்பண்ணைகள் நிறுவும் திட்டம்!
சென்னை: பப்பாளி, கொய்யா, எலுமிச்சை செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவிகிதத்தில் மானிய விலையில் வழங்கப்படும், 360 நாட்டுக்கோழிப்பண்ணைகள் நிறுவும் திட்டம் என வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை(மார்ச்.15) தாக்கல் செய்தார்.
தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து,
2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை (மார்ச் 15) தாக்கல் செய்து உரையாற்றினார்.
முன்னதாக, சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து பங்கேற்றனர்.
வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள் என்பதால் விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உழவர்களின் வாழ்வில் இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்புகிறேன் என அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில்,
9 லட்சம் குடும்பங்களுக்கு பழச்செடித் தொகுப்புகள்
2025-2026 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்னும் புதிய திட்டம் ரூ.125 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
9 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவிகிதம் மானியத்தில் பழச்செடித் தொகுப்புகள் வழங்கப்படும்.
1 லட்சம் இல்லங்களுக்கு 17 சதவிகிதம் மானியத்தில், பயறுவகை விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.
5 காளான் உற்பத்தி கூடங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும்.
15 லட்சம் குடும்பங்களுக்கு காய்கறி விதைகள் தொகுப்புகள்
6 வகையான காய்கறிகள் விதைகள் அடங்கிய தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்படும்.
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் எனும் புதிய திட்டம் ரூ.125 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
360 நாட்டுக்கோழிப்பண்ணைகள் நிறுவும் திட்டம்
ஊரகப்பகுதியில் உள்ள ஏழை மகளிருக்கு நாட்டுக் கோழிப்பண்களை அமைப்பதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கான நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.