ஹாக்கி இந்தியா விருதுகள்: சிறந்த ஹாக்கி குழு விருதைப் பெற்ற தமிழ்நாடு!
தலைகீழாக நெருப்பில் தொங்கவிட்டு சடங்கு: 6 மாதக் குழந்தை பார்வை இழந்த பரிதாபம்!
மத்திய பிரதேசத்தில் 6 மாதக் குழந்தையை தலைகீழாக நெருப்பில் தொங்கவிட்டு சடங்கு செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 13ல் கோலாரஸ் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றது. சிவபுரி பகுதியில் தம்பதியர் ஒருவருக்கு ஆண் குழந்தைப் பிறந்ததிருந்தது. ஆறு மாதக் குழந்தை சில நாள்களாக அசௌகரியமாக இருந்ததாகவும், பயந்தது பயந்து எழுவதாகவும் பெற்றோர் மந்திரவாதி ரகுவீர் தகாத் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
தாந்திரீக குருவான ரகுவீர் குழந்தைகளுக்கு சில சடங்குகளைச் செய்தார். அந்த சடங்கில் நெருப்பை மூட்டி ஆறு மாதக் குழந்தையை தலைகீழாகத் தொடங்கவிட்டுள்ளார். இந்த சடங்கில் குழந்தை பயங்கர கூச்சலிட்டு அழுதுள்ளது. சடங்கிற்குப் பிறகு குழந்தை குணமடைந்துவிடும் என பெற்றோர் சகித்துக்கொண்டனர்.
ஒருகட்டத்தில் குழந்தை மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு, பயந்துபோன பெற்றோர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். சிகிச்சையளித்த மருத்துவர் காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
குழந்தையின் கண்கள் மோசமடைந்த நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். குழந்தைக்குப் பார்வை மீட்கப்படுமா என்பதில் பெரும் சவாலாகவே உள்ளது.
இந்த விஷயத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த ஜான்வேத் பரிஹார் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது.
குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 72 மணி நேரத்திற்குப் பிறகுதான் குழந்தைக்குப் பார்வை மீண்டும் கிடைக்குமா என்பதை உறுதிசெய்ய முடியும் என்று என்று கண் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.