வேளாண்மை நிதி நிலை அறிக்கை 2025-2026: முக்கிய புதிய திட்டங்கள்
விவசாயிகள் மிடுக்குடன் நடைபோட புதிய திட்டங்கள் : எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
சென்னை: வேளாண் பெருமக்களான விவசாயிகள் மிடுக்குடன் நடைபோடும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வரும் 2025 - 06ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநலை அறிக்கையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அவர் கூறியதாவது, விவசாயிகளுக்கு 1.81 லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
57,000 விவசாயிகளுக்கு ரூ.510 கோடியில் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.1,631 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
மண்ணுயிர் காப்போம் திட்டத்தால் 21.31 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்
டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.