2026 தேர்தல் பணியைத் தொடங்கிய தேமுதிக!
இன்று(நவ. 10) நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்த நிலையில், மாவட்டச் செயலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: ரூ. 10 கோடி கேட்டு எம்.எல்.ஏ. மகன் கடத்தல்! தப்பித்தது எப்படி?
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை அமைத்திடவும், 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கவும் மாவட்டச் செயலர்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், விலைவாசி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, கனிமவளக் கொள்ளை அதிகரிப்பு உள்ளிட்டவற்றைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.