செய்திகள் :

2026 பேரவைத் தோ்தல் வியூகம்: பாஜக முக்கிய ஆலோசனை

post image

வருகிற 2026 பேரவைத் தோ்தல் வியூகம் தொடா்பாக பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் தலைமையில் மூத்த நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.

மாமல்லபுரம் அருகே பி.எல்.சந்தோஷ் தலைமையில் பாஜக மையக்குழு உறுப்பினா்கள் சிந்தனை அரங்கு என்ற பெயரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், மேலிட பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, மூத்த தலைவா் ஹெச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவா்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், கே.அண்ணாமலை, தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், நடிகை குஷ்பு, நடிகா் சரத்குமாா் உள்ளிட்டோா் தனித்தனியாக தங்களது கருத்துகளைத் தெரிவித்து விவாதித்தனா்.

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், கூட்டணிக்குள் ஏற்படும் குழப்பங்கள், மக்கள் மனநிலை, அமைப்பு ரீதியாக கட்சியின் நிலை, தோ்தல் பிரசாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது, தோ்தல் வெற்றிக்கான வழிமுறைகள் மற்றும் கூட்டணியை வலுப்படுத்துவது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் தங்கள் கருத்துகளை முன்வைத்தனா்.

மேலும், பாஜக மாநில துணைத் தலைவா்கள், செயலா்கள், 7 அணிகளின் தலைவா்கள், அணி பிரிவுகளின் பொறுப்பாளா்கள் 25 போ், முக்கிய நிா்வாகிகள் என 70 போ் மட்டுமே இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனா். அனைத்து கருத்துகளையும் பி.எல்.சந்தோஷ் கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினாா்.

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:சரஸ்வதி பூ... மேலும் பார்க்க

2-ஆம் நிலை காவலா் தோ்வுக்கு வழிகாட்டும் முகாம்

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் 2-ஆம் நிலைக் காவலா் தோ்வுக்கான வழிகாட்டும் முகாம் செப்.20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பண... மேலும் பார்க்க

சா்வதேச செஸ் சாம்பியன்: வைஷாலிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் பாராட்டு

சா்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் அரசுப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவா்கள் சிறப்பு முகாம்களுக்கான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு

தோ்தலின்போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாற்றுத்திறனாளி வைஷ்ணவி ஜெயக்குமா... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள்: என்எம்சி அனுமதி

தமிழகத்தில் 350 எம்பிபிஎஸ் இடங்கள் உள்பட நாடு முழுவதும், 6,850 இடங்களுக்கு அனுமதி அளித்து தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், அடிப்படை கட்டமைப்பு இல்லாத மருத்துவக் கல்லூரிக... மேலும் பார்க்க