2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளது: அமித் ஷா!
2026 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் உத்தரகண்ட் மாநிலத்தில் ஜன. 28 தொடங்கி நடைபெற்து. இந்தப் போட்டிகளின் நிறைவு நாளான இன்று விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைவதைத் தெரிவித்த இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பிடி உஷா அடுத்த முறை தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தவிருக்கும் மேகாலயா மாநில முதல்வரிடம் கொடியை வழங்கினார்.
இதில், சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அவருடன் விளையாட்டுத் துறை அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய அமித் ஷா, “இந்தியாவிற்கு விளையாட்டுத் துறையில் மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை இன்று என்னால் சொல்ல முடியும். 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இதையும் படிக்க |
தேசிய விளையாட்டுப் போட்டிகளால் மட்டுமல்ல, விளையாட்டு வீரர்களின் செயல்திறனும் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகள் காரணமாகவும் தேவ பூமியான உத்தரகண்ட், கேல் (விளையாட்டு) பூமியாக மாறியுள்ளது.
உத்தரகண்ட் இந்த முறை 21வது இடத்திலிருந்து தரவரிசையில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்காக பாடுபட்ட அனைத்து விளையாட்டு வீரர்களையும் நான் வாழ்த்துகிறேன்.
இங்கே நடைபெற்ற போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் செய்த சில சாதனைகள் சர்வதேச போட்டிகளில் செய்த சாதனைகளுக்கு இணையானவை என்பதையும் நான் கவனித்தேன்" என்று பேசினார்.
இதையும் படிக்க |
இந்தப் போட்டிகளில் அதிகபட்சமாக மகராஷ்டிர அணி 201 பதக்கங்களை (54 தங்கம், 71 வெள்ளி, 76 வெண்கலம்) வென்றுள்ளனர்.
இந்திய ஆயுதப் படையின் விளையாட்டு வாரியத்தின் ’சேவைகள் அணி’ அதிக அளவிலான தங்கப் பதக்கங்களைப் (68) பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த அணி மொத்தமாக 121 பதக்கங்களை (68 தங்கம், 71 வெள்ளி, 76 வெண்கலம்) வென்றுள்ளனர்.