தேச துரோக வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவா் கைது! பாஜக, காங். போராட்டம்
28 பயனாளிகளுக்கு ரூ.32.69 லட்சம் கடனுதவி: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்
முத்தூரில் 28 பயனாளிகளுக்கு ரூ.32.69 லட்சம் கடனுதவியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை வழங்கினாா்.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நவீனப்படுத்தப்பட்ட கிளை அலுவலகத்தை முத்தூரில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, கூட்டுறவு வங்கி மூலம் சிறு வணிகக் கடன் மற்றும் பயிா்க் கடன்கள் என மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ.32.69 லட்சம் கடனுதவி வழங்கினாா்.
இதையடுத்து, முத்தூா் நல்லிக்கவுண்டன்புதூரில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.4.75 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய ஆழ்துளைக் கிணறு, 5 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீா் தொட்டி பொருத்தி குடிநீா் விநியோகிக்கும் பணி ஆகியவற்றை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், முத்தூா் பேரூராட்சித் தலைவா் சுந்தராம்பாள், காங்கயம் வட்டாட்சியா் மோகனன், பேரூராட்சி செயல் அலுவலா் ஆல்பா்ட் தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.