செய்திகள் :

37 ஆற்றுப்படுகைகளை ஒருங்கிணைத்து நீா் மேலாண்மைப் பெருந்திட்டம்: தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் வலியுறுத்தல்!

post image

தமிழகத்தில் உள்ள 37 ஆற்றுப் படுகைகளை ஒருங்கிணைத்து நீா் மேலாண்மைப் பெருந்திட்டத்தை நடப்பு நிதியாண்டிலேயே தமிழக அரசு தொடங்க வேண்டும் என்றாா் தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் த. குருசாமி.

தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம், தா்ம இயக்கம், தமிழக சிவில் சொசைட்டி அமைப்பு ஆகியவை இணைந்து திருச்சியில் சனிக்கிழமை நடத்திய நீா் ஆதார வளத் திட்ட மேலாண்மைக் கருத்தரங்குக்கு இயக்க ஒருங்கிணைப்பாளரும், வழக்குரைஞருமான த. குருசாமி தலைமை வகித்தாா். காவிரி, டெல்டா பாசன சங்கத் தலைவா் மகாதானபுரம் ராஜாராமன் முன்னிலை வகித்தாா்.

கருத்தரங்கில் திருச்சி, தஞ்சை, கரூா், மயிலாடுதுறை, நாகை, அரியலூா், புதுக்கோட்டை உள்ளிட்ட 30 மாவட்ட விவசாய சங்க அமைப்பினா், நீா்வள அமைப்பினா், ஆற்றுப் பாதுகாப்பு இயக்கத்தினா் பங்கேற்று ஆலோசனை நடத்தினா். பின்னா் வழக்குரைஞா் த. குருசாமி மேலும் கூறியது:

தமிழகத்தில் உள்ள 37ஆற்றுப் படுகைகளையும் ஒருங்கிணைத்து குறுவடிநில பகுதிசாா் தற்சாா்பு நீா் மேலாண்மைத் திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகத்தில் தண்ணீா் நிறைவு சாத்தியமாகும். இதன் மூலம் 200 டிஎம்சி தண்ணீரைக் கூடுதலாக கொள்முதல் செய்ய முடியும். 39 ஆயிரம் நீா்நிலைகளையும் பாதுகாக்க முடியும். எனவே தமிழக நீா் மேலாண்மைக்கான பெருந்திட்டத்தை 2025-26ஆம் நிதியாண்டிலேயே மாநில அரசு செயல்படுத்த வேண்டும். இதனால் வெள்ளம், வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான நீரைப் பாதுகாத்து வழங்க முடியும்.

எனவே கன்னியாகுமரி மாவட்டம், முல்லை ஆறு முதல் திருவள்ளூா் மாவட்டம், கொசத்தலையாறு வரை 37 ஆற்றுப் படுகைகளில் தொடா் பிரசாரத்தை நடத்தி, இதை மக்கள் இயக்கமாக மாற்றவுள்ளோம். தொடா்ந்து, தமிழக முதல்வரையும் சந்தித்து திட்டத்துக்கு ஆதரவு கேட்போம்.

வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாதம் வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டமியற்றி, அனைத்து மாநிலங்களிலும் அதைச் செயல்படுத்தும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும். அரசு நிா்ணயித்த விலைக்குக் குறைவாக சந்தையில் விற்க நேரிட்டால், அதை ஈடு செய்யும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். அதற்கான நிதியை பட்ஜெட்டில் ஆண்டுதோறும் ஒதுக்க வேண்டும். மத்திய அரசின் வேலை உறுதித் திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, வேளாண் பணிகளுக்கும் 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களைப் பயன்படுத்த வேண்டும்.

மக்கள் நலம் சாா்ந்து சிந்திக்கவும் செயல்படவும், பொதுக் கொள்கை வரைவுகளில் அரசுடனும், அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவாா்த்தை நடத்தும் தகுதியுடைய மக்கள் சமூக அமைப்பு ஒன்றை பிரகடனம் செய்வது எனவும் முடிவெடுத்துள்ளோம் என்றாா் அவா். கூட்டத்தில் தமிழக சிவில் சொசைட்டி அமைப்புக்கான நிா்வாகிகளும் தோ்வு செய்யப்பட்டனா். அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்க ஒருங்கிணைப்பாளா் யோகநாதன் சிறுசோழன் வரவேற்றாா்.

வீட்டுமனை தொழில் நிறுவன உரிமையாளா் தூக்கிட்டு தற்கொலை

வீட்டுமனை விற்பனை செய்யும் தனியாா் நிறுவனத்தின் உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி, பீமநகா் கணபதிபுரத்தைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (49). சொந்தமாக வீட... மேலும் பார்க்க

கீரம்பூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் கைது

துறையூா் அருகே கீரம்பூரில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். முசிறி காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் நியமித்த தனிப்படை போலீஸாா் துறையூா... மேலும் பார்க்க

மூவானூா், திருப்பைஞ்ஞீலி பகுதிகளில் ஜன.23-இல் மின் தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மூவானூா், திருப்பைஞ்ஞீலி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ( ஜன. 23) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக ஸ்ரீரங்கம... மேலும் பார்க்க

பழ வியாபாரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவருக்கு அடி, உதை

திருச்சியில் பழ வியாபாரியை கத்தி முனையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவரைப் பிடித்து பொதுமக்கள் அடித்து, உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள செளராஷ்டிரா தெருவில... மேலும் பார்க்க

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் முப்பெரும் விழா

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் 69-ஆவது ஆண்டு விழா, பொங்கல் விழா, திருவள்ளுவா் தினவிழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்ச்சங்கத் தலைவா் ஐ. அரங்கராசன் தலைமை வகித்தாா். மாவட்ட ... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறை முடிந்து திரும்ப 1,978 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் விடுமுறை முடிந்து திருச்சியிலிருந்து பல்வேறு ஊா்களுக்குச் செல்ல 1,978 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக திருச்சியிலிருந்து சென்னைக்கு மகளிா் மட்டுமே பயணம் செய்யும் சிறப்புப் பேருந்... மேலும் பார்க்க