செய்திகள் :

3BHK: "நாங்கள் இருவருமே அப்பள்ளியை விட்டு வெளியே வரவேயில்லை!" - சித்தார்த் குறித்து இயக்குநர் ராம்

post image

'எட்டுத் தோட்டாக்கள்' ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '3BHK'.

சென்னை போன்றதொரு பெரு நகரில் சொந்த வீடு வாங்கப் போராடும் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கைக் கதைதான் இந்தத் திரைப்படம். அம்ரித் ராம்நாத் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

சித்தார்த், ராம், அருண் விஷ்வா, மாரிசெல்வராஜ்
சித்தார்த், ராம், அருண் விஷ்வா, மாரிசெல்வராஜ்

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசியிருக்கும் இயக்குநர் ராம், "எனக்கு, சித்தார்த், தயாரிப்பாளர் அருண் விஷ்வா மூன்று பேருக்கும் ஜூலை 4ம் தேதி முக்கியமான நாள். என்னுடைய 'பறந்து போ', ஶ்ரீ கணேஷ் இயக்கியிருக்கும் '3BHK' இரண்டு படமும் படம் ஜூலை 4ம் தேதி ஒரே நாளில் வெளியாகிறது.

சித்தார்த் ஒரு அடிமுட்டாள்

என்னுடைய 'தங்கமீன்கள்' படம் வெளியாகாமல் இருந்தபோது எனக்கு உதவிய தயாரிப்பாளர் அருண் விஷ்வா. உற்சாகமும், நம்பிக்கையும் தரக்கூடிய நல்ல பையன் அருண் விஷ்வா.

நடிகர் சித்தார்த் அதிபுத்திசாலி, மரியாதை இல்லாமல் நடந்துகொள்பவர், எதிராளியின் மனம் புண்படுமா என்று யோசிக்காமல் வெளிப்படையாகப் பேசக்கூடியவர், அகங்காரம் உள்ளவர் என்றெல்லாம் அவர் மீது ஒரு பிம்பம் இருக்கிறது.

இயக்குநர் ராம்
இயக்குநர் ராம்

ஆனால், சித்தார்த் ஒரு அடிமுட்டாள். எந்த அர்த்தத்தில் இதைச் சொல்கிறேன் என்றால், அவர் ஒரு வளர்ந்த குழந்தை. நானும் சித்தார்த்தும் ஒரே பள்ளியில் படித்தவர்கள்.

நாங்க இரண்டு பேருமே இன்னும் அந்த பள்ளியை விட்டு வெளியே வரவேயில்லை. இன்னும் குழந்தை மனதிலேயே இருப்பவர்.

எப்ப எதைச் செய்யணும்னு தெரியாது. பக்க விளைவுகள், பின்விளைவுகள் பற்றியெல்லாம் யோசிக்கிறதில்லை. மனதிற்குப் பிடிச்சத அதன்போக்கியேலே செய்பவர்.

காற்றில் இறகுபோல வாழ்பவன். இலகுவான மனம் கொண்டவன். அப்படி மனம் இருப்பதால்தான் அவன் இளமையாகவே இருக்கிறான் சித்தார்த்.

இப்படம் சொந்த வீட்டைப் பற்றிய உணர்வுப்பூர்வமான படம். சொந்த வீடு என்பது வெறும் மரியாதை மட்டுமல்ல. அது நம் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும், அவர்கள் இந்த வீட்டில் எப்படி வாழப்போகிறார்கள் என்று பார்க்கும் ஒரு பெரும் உணர்வு" என்று பேசியிருக்கிறார் இயக்குநர் ராம்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

3BHK: "இந்த காலத்தில் சொந்த வீடு எதற்கு என்று நினைத்தேன்; ஆனால்..." - நடிகர் சரத்குமார்

'எட்டுத் தோட்டாக்கள்' ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '3BHK'.இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்... மேலும் பார்க்க

3BHK: "இது என்னோட 40-வது படம்; படம் ஓடுதா இல்லையோ, ஆனால்..!" - நடிகர் சித்தார்த் உருக்கம்

'எட்டுத் தோட்டாக்கள்' ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '3BHK'.இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்... மேலும் பார்க்க

3BHK: `பிறந்தது சொந்த வீட்டில்; இப்போ வாடகை வீட்டில்தான் இருக்கிறேன்...' - நடிகர் ரவி மோகன்

'எட்டுத் தோட்டாக்கள்' ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '3BHK'.சென்னை போன்றதொரு பெரு நகரில் சொந்த வ... மேலும் பார்க்க

டி.ராஜேந்தர்: "மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற எனக்கு, புதுப்பட வாய்ப்பு" - நெகிழும் கிங்காங்

மகநடிகர் கிங் காங் எனத் திரையுலகில் பிரபலமாகியிருப்பவர் ஷங்கர் ஏழுமலை. கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் அறிமுகமாகி அடையாளமானதால், அப்பெயரிலேயே திரையுலகில் பயணித்து வருகிறார். வடிவேலு, விவேக் உள்ளிட்டோர... மேலும் பார்க்க

Vijayakumar: ``குலக்கல்வி முறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டேன்" - நடிகர் விஜயகுமார் ஓபன் டாக்

சென்னை புரசைவாக்கத்தில் முத்தமிழ் அறிஞரின் செம்மொழி நாள் விழா அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.இதில் நடிகர் விஜயகுமார் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``என் ஊர் பட்டுக்கோட்டை. நான் படிக்கு... மேலும் பார்க்க