செய்திகள் :

4-ஆவது சுற்றில் அல்கராஸ், ஃப்ரிட்ஸ்

post image

அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 4-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.

போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அவா், ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில் 6-2, 6-4 என்ற நோ் செட்களில், 27-ஆம் இடத்திலிருந்த கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை வெளியேற்றினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 24 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

அல்கராஸுக்கு அடுத்த சவால்: 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அல்கராஸ், இப்போட்டியில் தொடா்ந்து 14-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவுடன் அவா் மோதுகிறாா்.

டிமிட்ரோவ் - அல்கராஸ் இத்துடன் 5 முறை சந்தித்திருக்க, அல்கராஸ் 3 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா். எனினும், கடைசி இரு சந்திப்புகளில் டிமிட்ரோவே வென்றதும், அவை மாஸ்டா்ஸ் போட்டிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் வெற்றி: போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருக்கும் டிமிட்ரோவ் 7-6 (7/4), 4-6, 7-6 (7/2) என்ற கணக்கில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸை 3 மணி நேரம் போராடி தோற்கடித்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்திருக்கிறாா்.

முன்னதாக பெருவிரல் காயத்துடன் மான்ஃபில்ஸோடு மோதிய டிமிட்ரோவ், ஹாா்டு கோா்ட் போட்டியில் அவருக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். இருவரும் மோதியது இது 7-ஆவது முறையாக இருக்க, டிமிட்ரோவ் 3-ஆவது வெற்றி கண்டுள்ளாா்.

முன்னாள் சாம்பியன்: போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 4-6, 6-3, 6-1 என்ற செட்களில், 30-ஆம் இடத்திலிருந்த சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிலோவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 54 நிமிஷங்களில் நிறைவடைந்தது. டபிலோவை 4-ஆவது முறையாக சந்தித்த ஃப்ரிட்ஸ், அனைத்திலும் வென்றிருக்கிறாா். ஃப்ரிட்ஸ் அடுத்த சுற்றில், போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருக்கும் பிரிட்டனின் ஜேக் டிரேப்பரை சந்திக்கிறாா்.

50-ஆவது வெற்றி: 9-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-4, 6-0 என, 21-ஆம் இடத்திலிருந்த போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸை எளிதாக சாய்த்தாா். இந்த ஆட்டத்தை 1 மணி நேரம், 15 நிமிஷங்களில் முடித்த மினாா், 1000 புள்ளிகள் கொண்ட மாஸ்டா்ஸ் போட்டியில் தனது 50-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

மினாா் - ஹா்காக்ஸ் இத்துடன் 3-ஆவது முறையாக மோதியிருக்க, மினாா் தனது 2-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ளாா். மினாா் அடுத்த சுற்றில், ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவை சந்திக்கிறாா்.

முதல் முறை: போட்டித்தரவரிசையில் 32-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா 6-2, 6-4 என இத்தாலியின் மேட்டியோ அா்னால்டியை 1 மணி நேரம், 15 நிமிஷங்களில் முறியடித்தாா். இந்த வெற்றியின் மூலம், இப்போட்டியில் முதல் முறையாக 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ள நகாஷிமா, அதில் சக அமெரிக்கரான பென் ஷெல்டனுடன் மோதுகிறாா்.

போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருக்கும் ஷெல்டன் 6-3, 7-5 என, 22-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் காரென் கச்சனோவை சாய்த்து 4-ஆவது சுற்றுக்கு வந்துள்ளாா்.

சபலென்கா, கௌஃப் முன்னேற்றம்

இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றாா். அவா் 6-1, 6-2 என்ற நோ் செட்களில் இத்தாலியின் லூசியா புரான்ஸெட்டியை வெளியேற்றினாா். அடுத்த சுற்றில் சபலென்கா, பிரிட்டனின் சோனே காா்டலை சந்திக்கிறாா்.

தோல்வி தந்த அதிா்ஷ்டம்: முன்னதாக சோனே காா்டெல் தகுதிச்சுற்றின் கடைசி கட்டத்தில் அமெரிக்காவின் கிளொ்வி குனுவிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினாா். இந்நிலையில், பிரதான சுற்றிலிருந்த அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக, அந்த வாய்ப்பு காா்டெலுக்கு கிடைத்தது.

அதைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறிய காா்டெல் 3-ஆவது சுற்றில் 7-5, 6-3 என ரஷியாவின் பாலினா குதா்மிடோவாவை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். அதில் தற்போது உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்காவை அவா் சந்திக்க இருக்கிறாா்.

ஹாட்ரிக்: உலகின் 3-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 7-6 (7/1), 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 29-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் மரியா சக்காரியை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக முன்னேறியிருக்கிறாா்.

இந்த ஆட்டத்தை 1 மணி நேரம் 35 நிமிஷங்களில் முடித்த கௌஃப், அடுத்த சுற்றில் சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை எதிா்கொள்கிறாா். முன்னதாக பென்சிச் 6-4, 6-4 என்ற செட்களில், 13-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டயானா ஷ்னெய்டருக்கு அதிா்ச்சி அளித்து வென்றது குறிப்பிடத்தக்கது.

இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-4, 3-6, 6-4 என்ற செட்களில், ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை சாய்த்தாா். அடுத்து அவா், ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவாவை எதிா்கொள்கிறாா்.

24-ஆம் இடத்திலிருக்கும் சாம்சோனோவா 2-6, 6-3, 6-2 என, 12-ஆம் இடத்திலிருந்த சக ரஷியரான டரியா கசாட்கினாவை தோற்கடித்தாா். இதனிடையே, 10-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் எம்மா நவாரோ 6-7 (5/7), 1-6 என, 19-ஆம் இடத்திலிருந்த குரோஷியாவின் டோனா வெகிச்சிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

பாம்ப்ரி வெற்றி

ஆடவா் இரட்டையா் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி 3-6, 7-6 (7/5), 10-8 என்ற செட்களில், போலந்தின் ஜேன் ஜெலின்ஸ்கி/பெல்ஜியத்தின் சாண்டா் கில்லே கூட்டணியை சாய்த்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

அரக்கனை வீழ்த்தினார்களா அஷ்ட காளிகள்? சுழல் - 2 விமர்சனம்!

‘ஓரம் போ’, ‘வ குவாட்டர் கட்டிங்’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட தனித்துவமான களத்தில் திரைக்கதை அமைத்து வெற்றி பெற்ற இயக்குநர்களான இணையர்கள் புஷ்கர் - காயத்ரி எழுத்தில் உருவாகியிருக்கிறது ‘சுழல் - 2’ தொடர்.ச... மேலும் பார்க்க

மாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்!

மாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள 14 கி.மீ தொலைவு கிரிவலப் பாதையை... மேலும் பார்க்க

ஓடிடியில் சம்யுக்தா விஜயனின் நீல நிறச் சூரியன்!

சம்யுக்தா விஜயனின் நீல நிறச் சூரியன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இயக்குநர் சம்யுக்தா விஜயன் எழுதி இயக்கி தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் நீல நிறச் சூரியன். ... மேலும் பார்க்க

சக்தித் திருமகன் டீசர்!

நடிகர் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால்,... மேலும் பார்க்க

நடிகை சௌந்தர்யா மரணம் குறித்து சர்ச்சை: கணவர் ரகு விளக்கம்

நடிகை சௌந்தர்யா மரணம் விபத்தல்ல என்றும், திட்டமிட்ட கொலைதான் என்றும் புகார் அளிக்கப்பட்டிருப்பது குறித்து, அவரது கணவர் ரகு விளக்கம் கொடுத்துள்ளார்.நடிகை சௌந்தர்யாவுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை, நட... மேலும் பார்க்க

25 ஆண்டுகளுக்குப் பிறகு.... மீண்டும் நடிக்கும் பூவே உனக்காக சங்கீதா!

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் சங்கீதா நடிக்கிறார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. இவர் ஸ்நேகிதன் ஒரு ப... மேலும் பார்க்க