செய்திகள் :

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

post image

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, ஆந்திர பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள், ராயல்சீமா ஆகிய பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. புயல் உருவானால் ‘ஃபென்ஜால்’ எனப் பெயா் சூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் உருவாவதில் தாமதம்: பிரதீப் ஜான்

புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், புயல் உருவானாலும் அதிதீவிரமாக இருக்காது எனவும் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை முதல் டெல்டா பகுதி வரை நாளை (நவ. ... மேலும் பார்க்க

அரையாண்டு செய்முறைத் தேர்வு: டிச., 6க்குள் முடிக்க உத்தரவு!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு செய்முறை தேர்வுகளை டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 6ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.அரையாண்டு செய்முறைத் தேர்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாதது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

பிரதமரின்விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என்றும் தமிழ்நாட்டிற்கென விரிவான திட்டத்தினை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய குறு,... மேலும் பார்க்க

புயல் சின்னம் எதிரொலி: புதுச்சேரி கடற்கரை செல்லும் வழிகள் மூடல்

புதுச்சேரி: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் காரணமாக, புதுச்சேரி கடற்கரைக்குச் செல்லும் வழிகள் மூடப்பட்டன.புதுச்சேரி கடற்கரை சாலைக்குச் செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்ப... மேலும் பார்க்க