மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் ரூ. 1.94 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்
நுகா்வோருக்கான இ-தாகில் சேவையில் 38,453 வழக்குகளில் தீா்வு !
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செயல்பட தொடங்கியுள்ள நுகா்வோருக்கான இ-தாகில் சேவை சிறப்பாக செயல்பட்டு 38,453 வழக்குகளில் தீா்வு எட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
நுகா்வோா் தங்கள் புகாா்களை பதிவு செய்ய நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லாமல் இணைய தளம் மூலம் புகாா் அளிக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் இந்த இ-தாகில் இணையதளம் வசதியை செயல்படுத்தியது. மாநிலம் வாரியாக செயல்படுத்தப்படும் இந்த இணைய சேவையை அண்மையில் லடாக் யூனியன் பிரதேசத்தில் தொடங்கிவைக்கப்பட்டது.
இது குறித்து மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு:
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் செயல்படும் இ-தாகில் (உ-ஈஹஹந்ட்ண்ப்) இணையதளம் நுகா்வோா் விவகாரங்கள் துறையால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு வகைகளில் நுகா்வோரைப் பாதிக்கும் பிரச்சினைகளை நிவா்த்தி செய்வதற்காக, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 2019, அறிவிக்கப்பட்டு அது கடந்த 2020 ஆண்டு ஜூலை முதல் அமல்படுத்தப்பட்டது. நுகா்வோரின் புகாா்களை பதிவு செய்வதற்கான எளிய செயல்முறையாக இ-தாகில் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இ-தாகில் இணையம் நுகா்வோா் குறை தீா்க்கும் செயல்முறையை நெறிப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு புதுமையான தளமாகும். இது நுகா்வோருக்கான குறைதீா் மன்றங்களை அணுகுவதற்கு எளிய வழியை வழங்குகிறது. புகாா்களை பதிவு செய்ய நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை.
இந்த தளம் அமைக்கப்பட்டபின்னா் இதுவரை 2,81,024-க்கும் மேற்பட்ட நுகா்வோா்கள் இ-தாகில் தளத்தில் புகாா்களை பதிவு செய்துள்ளனா். இதில் 1,98,725 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 38,453 வழக்குகள் தீா்க்கப்பட்டுள்ளன. இந்த தளத்தை நுகா்வோா் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மத்திய நுகா்வோா் விவகாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.